கண்ணுறங்காக் காவல்

கண்ணுறங்காக் காவல் (ஒரு முடிவின் ஆரம்பம்), ஆங்கிலத்தில் ப.சிதம்பரம், தமிழில் ரமணன், கவிதா பதிப்பகம், விலை 300ரூ. காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்தவர் ரமணன். அரசியல், பொருளாதாரம், வெளியுறவு, கொள்கை, சட்டம் ஆகியவை பற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் சிதம்பரம். பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்கள் ஜொலிக்கின்றன. ஜனநாயகத்தின் உண்மையான பொருளைக் கூறுவதால், இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க […]

Read more

மறக்கமுடியாத மாபெருந்தலைவர்

மறக்கமுடியாத மாபெருந்தலைவர், திருவாரூர் இரா. தியாகராஜன்(சின்ன குத்தூசி), சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கர்மவீரர் காமராஜருடனான அனுபவ நிகழ்வுகளை பிரபலங்கள் பலரிடம் கேட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. காமராஜரின் கண்ணியம், உதார குணத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக்.160, விலை 80ரூ. இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும், கவிதைகளாக, காவியங்களாக வெளிவந்தன. அவை காலமாற்றத்தால், நவீன இலக்யி வெளிப்பாட்டால், கட்டுரைகளாக உருமாற்ற துவங்கின. இந்த ஆய்வு புத்தகத்தில் பெண்யிம், திருக்குறளில் கல்வி, சிலப்பதிகாரம் காட்டும் மானுட விழுமியங்கள் உள்ளிட்ட, பல ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. மதிகெட்டான் சோலை, சமகால அரசியல், வணிகம், சமூகம் உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை முன் முடிவுகளற்று அருகில் சென்று, ஆழம் பார்த்து எழுத்தாக வடிக்கப்பட்டுள்ளது. அனுபவத் திரட்சியாக உள்ளதால், ரத்தமும் சதையுமான மனிதர்களின் துறைகள் குறித்த வெளிப்படையான கட்டுரைகளாக விரிந்துள்ளன. இதில், 27 கட்டுரைகள், வெவ்வேறு துறை சார்ந்து விரிந்துள்ளன. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ. எவ்வகையான கல்வி தேவை? மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் […]

Read more

சங்க இலக்கியத்தில் சமூக அறம்

சங்க இலக்கியத்தில் சமூக அறம்,  நந்தினி பதிப்பகம், இரணியன், பக்.132, விலை ரூ.130. சங்க இலக்கியத்தில் சமூக அறம் கட்டுரை உள்ளிட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இயற்கை, வாழ்வியக்கம், சமூக வளர்ச்சி பற்றி இயங்கியல் நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லும் தமிழ்த் தொல்லிலக்கியப் பாடல்களில் இயங்கியல் கூறுகள் கட்டுரை, பகைவரை அழித்து நண்பர்களை உயர்வடையச் செய்ய வேண்டும், வலிமையானவருக்குத் தலைவணங்கி மெலிவானவரை தாழ்த்தக் கூடாது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியத்தில் உள்ளதை எடுத்துக் காட்டும் சங்க இலக்கியத்தில் சமூக […]

Read more

மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அந்தர மனிதர்கள்

அந்தர மனிதர்கள், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், பக்.112, விலை 105ரூ. பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதைதான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமலர், 12/1/2018

Read more

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும்

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும், பேராசிரியர் க.பரந்தாமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. தமிழ்ச் சமுதாயம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில் தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக இன்றைய இந்தியச் சமுதாயத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அனைவரையும் சிந்திக்க தூண்டுகிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்கள் நலன் கருதியே செயல்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா வரும் 20 ஆண்டுகளில் வழிகாட்டும் என்று நூலாசிரியர் தன்னுரைய வைர வரியையும் நூலில் சுட்டி காட்டி உள்ளார். […]

Read more
1 65 66 67 68 69 88