சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. ராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன. யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன. உள்ளே மறைந்து கிடக்கும் நம் திறமைகள் […]

Read more

செந்தமிழில் சமண நூல்கள்

தமிழுக்கு சமணர் அளித்த கொடை செந்தமிழில் சமண நூல்கள், கரந்தை அ. சுகுமாரன், பக். 284, விலை 100ரூ. சமண சமயத்தினர் தமிழுக்களித்த நூற்கொடைகள் பல. காப்பியங்கள், இலக்கணங்கள், உரைகள், இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய வகைமைகளில் சமணப் புலவர்களின் படைப்புகள் பலவாகும். சிற்றிலக்கிய வகையிலும் சமணப் புலவர்களின் பங்களிப்பும் பெரிதே என இந்நூல் மெய்ப்பிக்கிறது. சமண சமயத் திங்களிதழ் ஒன்றில் இவ்வாசிரியர் எழுதிய, 120 கட்டுரைகளில் முதல், 60 கட்டுரைகள், ‘ஜைன நூல்களை அறிவோம்’ என்னும் தலைப்பில் முன்னதாக வெளிவந்துள்ளது. எஞ்சிய, 60 கட்டுரைகள் […]

Read more

நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம்,  யுகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 167, விலை ரூ. 300. திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?) தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய ‘மண்டேலா – லாங் […]

Read more

பெண்ணாகப் பிறந்தாலே

பெண்ணாகப் பிறந்தாலே, ச.அமுதா, இராசகுணா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாழ முடியாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி , இந்நிலையை எவ்வாறு மாற்றுவது என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிறப்பதற்கு உரிமை வேண்டும்#39; என்ற முதல் கட்டுரை ‘பெண் சிசுக்கொலை‘39; நீண்டகாலமாக இருப்பதையும், இன்றும் அது தொடர்வதையும் விவரிக்கிறது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பிரச்னைகள், அவர்கள் மீதான வன்கொடுமைகள், சமுதாயத்தில் பெண்களைக் கீழாக நினைக்கும் மதிப்பீடுகள், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெண்கள் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, ‘எவிடன்ஸ்’கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். காவல் துறை வன்முறைகள், ஜாதிய வன்கொடுமைகள், பெண்கள் மீதான கொடுமைகள் என கள ஆய்வு செய்து, செய்திகளோடு மட்டும் அல்லாமல் ஆதாரப் படத்துடன் கூடிய, 29 நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்நூல் குரல் கொடுக்கிறது. சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் இந்நூல் பதியப்பட்டு உள்ளது. – முனைவர் […]

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பயண நூல் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நாமும் நூலாசிரியருடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்நூல், இந்தியாவுக்குக் குறுக்கே ஜெயமோகனும், அவரின் ஆறு நண்பர்களும், 2008ல் மேற்கொண்ட பயண அனுபவம், நூலாக வெளி வந்துள்ளது. இந்நூலில் தாரமங்கலம், லெபாஷி, பெனுகொண்டா, தாட்பத்ரி, அகோபிலம், மகா நந்தீஸ்வரம், ஸ்ரீசைலம், நலகொண்டா, பாணகிரி, வாரங்கல், கரீம் நகர், நாக்பூர், போபால், சாஞ்சி, கஜுரஹோ, பீனா, வாரணாசி, சாரநாத், போத்கயா ஆகிய 18 இடங்களுக்குச் சென்று […]

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், தொகுப்பு ஜெ.ஜெயசிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 215ரூ. சுதந்திரத்திற்குப் பின் தன் படைப்புகளால் அதிகம் பேசப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். “நான் நானாக உருவானவன்” என்ற பிரகடனத்துடன்தான் அவரது எழுத்துக்கள் பலரின் மனதைத் தட்டியது. அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் என்று பல்வேறு துறைகளிலும் அவரது எழுத்துக்கள் ஆட்சி செய்தன என்ற போதும் எந்த இயக்கத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரப் பறவையாய், தன்னையே ஒரு இயக்கமாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அவரது வெளிவராத கட்டுரைகள் பலவற்றை அவரது […]

Read more

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள், இயக்குநர் பேரரசு, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.110. கவிஞர் வைரமுத்து எழுதிய ‘;இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்39’ நூலை நினைவூட்டி, நம் கண்களை ஈரமாக்குகிறது இயக்குநர் பேரரசு எழுதியிருக்கும் இந்த நூல். நாட்டரசன் கோட்டையில் பிறந்த பேரரசுவுக்கு, சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அவரின் தந்தை கூறுகிறார்: ‘ஓராண்டு காலம் முயற்சி செய். வாய்ப்பு கிடைக்காவிட்டால் திரும்பி வந்துவிடு, வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப பாஸ்போர்ட் எடுத்து வைச்சிருக்கேன 39;39’ என்கிறார். இப்படியொரு நிபந்தனையோடு சென்னைக்கு வந்த பேரரசு, […]

Read more

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?, பதிப்பாசிரியர்கள் டாக்டர் ந.வேலுசாமி, டாக்டர் மோசசு மைக்கேல் பாரடே, ‘யுஎம்ஐ’ யூனிக் வெளியீடு, விலை 150ரூ. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்,

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க. மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 72 73 74 75 76 88