வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்,

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 145ரூ. திருமந்திர பாடல்களில் சிலவற்றுக்கு எளிய விளக்கமும், நடைமுறை உதாரணங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்ற நூல். குறிப்பாக அன்பும் சிவனும், யான் பெற்ற இன்பம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், இனிய இல்லறம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ. ஊழல் தேசியமயமாகி விட்டது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்கள் பற்றியும் ப. திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திர மௌலி, செங்கைப் பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. இந்நூலாசிரியர், உலக சுகாதார மையத்தில் பெரிய பொறுப்பிலிருந்த தன் தந்தையுடன் பல நாடுகளைச் சிறு வயதிலேயே சுற்றி வந்தவர். விவசாயம் குறித்த ஆர்வத்தால், அது குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டியவர். விவசாய நாடாகிய நம் நாட்டில், வர வர விவசாயத் தொழில் சுருங்கி, மற்ற தொழில்கள் பெருகி வருகின்றன. இருக்கும் விவசாயமும்கூட இயற்கை விவசாயமாக இல்லாமல், ரசாயனப் பொருள்களைக் கொண்டு செயற்கை விவசாயமே நடைபெறுகிறது. இதனால் […]

Read more

வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்)

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி, பாவை பப்ளிகேஷன்ஸ்,  பக்.1208, விலைரூ.900. மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர். கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் ‘வரலாற்றுச் சிறப்பில் மதுரை39‘ […]

Read more

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. கருத்துகளின் ஜல்லிக்கட்டு தமிழ்ச் சமூகத்தில் நிகழும் சமகால மக்கள் போராட்டங்கள் குறித்து உடனுக்குடன் நூல்கள் வெளியாவது ஆரோக்கியமானதொரு அணுகுமுறை. சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம் போன்றவற்றைப் பற்றிப் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்தும் நூல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்ம் குறித்த பலரின் பன்முகப்பட்ட பார்வைகள் […]

Read more

குற்றங்களே நடைமுறைகளாய்

குற்றங்களே நடைமுறைகளாய், ப. திருமலை, வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் கல்வி அறிவு, குற்ற செயல்கள், விவசாய பிரச்னை, மழை, சூழியல் வன உயிர்கள் பாதுகாப்பு என, பல துறைச் சார்ந்த, 25 கட்டுரைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தமிழகத்தில், கடந்த, எட்டு ஆண்டுகளில், மட்டும் காணாமல் போன விவசாய நிலம், 13 லட்சம் ஏக்கர் ஆகும். ‘காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, […]

Read more

தடம் பதித்த தமிழறிஞர்கள்

தடம் பதித்த தமிழறிஞர்கள், பேராசிரியர் இராம. குருநாதன், விழிகள் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. நுணுக்கம் மிக்க தகவல்கள் சிறந்த சன்மார்க்கம் ஒன்றே பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்த்திடுங்கான்’ என, வள்ளலார் வலியுறுத்திய மரணமிலாப் பெருவாழ்வை, ‘மேதினியில் மரணமில்லை’ என்னும் பாரதி (பக்.17) ஒப்பிட்டுத் தொடங்கி, வள்ளலாரும் பாரதியும் கட்டுரை முதல், ‘நான் உடலால் என் தந்தையின் மகன், உள்ளத்தால் திருவள்ளுவரின் மகனாக இருக்கிறேன்’ என்ற ‘மு.வ.,வின் படைப்பில் காந்தியக் கருத்தியல்’ ஈறாக, 10 தமிழறிஞர்கள் பற்றிய நுணுக்கமான கட்டுரைகளின் தொகுப்பு […]

Read more

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள்

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள், அ. கோவிந்தராஜ், வானதி பதிப்பகம், பக். 174, விலை 110ரூ. வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர், மாணவர்கள் என இருதரப்பிற்குமே, பெரும் சுமையாகவே உள்ளது. கல்வி என்பது, பொருளீட்டும் முதலீடாகவே கருதப்படும் அளவுக்கு சமூக மாந்தரின் சிந்தனை சுருங்கி விட்ட நிலையில், கற்றலும், கற்பித்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் எழுதியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி, வகுப்பறை ஒழுக்கங்களை முதல் பத்து கட்டுரைகளில், செம்மையுடன் […]

Read more

மகரந்த சுவடுகள்

மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70. தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த […]

Read more
1 73 74 75 76 77 88