போர்த் தொழில் பழகு

போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]

Read more

மண்ணின் மரங்கள்

மண்ணின் மரங்கள், கா. கார்த்திக் தமிழ்தாசன், இயல்வாகை வெளியீடு, பக். 60, விலை 75ரூ. நீர் நிலை, மரங்களை அழித்து, நகரம் நிர்மாணிக்கப்படுகிறது. சாலை ஓர நிழலுக்காக, விரைவில் வளரும், வெளிநாட்டு மரங்கள் நடப்படுகின்றன. நாட்டு மரங்களை நம்பி வாழ்ந்த உயிரினங்கள், உணவு கிடைக்காமல் அழிகின்றன. இதனால், மகரந்த சேர்க்கையின்றி, காய்கறி, பழங்களும் அருகி, உயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காற்று, மழை, வெயிலை தாங்க பழக்கமில்லாத, அயல் மரங்களும் மடிகின்றன. இதை விரிவாக பதிவு செய்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள்,

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், பக். 200+192, விலை 80+75ரூ. தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை ஒவ்வொரு கட்டுரையும் இயம்புகின்றன. இரு நூல்களிலும் முறையே, 25 + 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் நூலில், ‘பெண் தன் உணர்வை ஆணைப் போல் வெளிப்படுத்தாமையே அதன் சுவையைக் கூட்டும்போலும்’ என்றும் (பக்.21), ‘உண்மையறிவே மிகும்’ என்ற கட்டுரையில், வள்ளுவரின், ‘தொட்டனைத் […]

Read more

நட்சத்திரங்கள் பறிப்போம்

நட்சத்திரங்கள் பறிப்போம், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கலைஞன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. நட்சத்திரங்களைப் பறிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நூல். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் எல்லாம் ஒரே குரலாகவே ஒலிக்கின்றன. “நம்பிக்கை மிக்க சிந்தனையோடு வாழ்வது எளிமையாக இருந்தாலும், உலகில் ஐந்து சதவிகித மக்களே நம்பிக்கை மிக்க சிந்தனையாளராக வாழ்கிறார்கள். அந்த ஐந்து சதவிகித மக்கள் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து உலகின் ஐம்பது சதவிகிதத்தை நிர்வாகம் செய்கிறார்கள்‘’ எனக் கூறும் நூலாசிரியர், ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து […]

Read more

ஆண்ட்ராய்டின் கதை

ஆண்ட்ராய்டின் கதை, ஷான், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 70ரூ. உலகின் திரைக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்கள், கற்பனைக்கும் எட்டாத சுவாரசியம் நிறைந்தவை. தொழில் நுட்பம், எப்படியெல்லாம் உலகத்தை மாற்றியது என்ற சமூகப் புரிதல், ‘ஆண்ட்ராய்டின் கதை’ நூலின் மைய நீரோட்டம். இன்றைய சூழலில், 78 சதவீதம் பயனாளர்கள் கையில், ஏதோ ஒரு வடிவத்தில் உலாவும், ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தின் தோற்றமும், வளர்ச்சியும், கூடவே மனித வாழ்வின், ‘டெக்’ பரிணாமச் சிதைவையும் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 7/1/2017.

Read more

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பக். 220, விலை 190ரூ. சங்க இலக்கியம் துவங்கி, 1980களின் படைப்புகள் வரை, உலக இலக்கிய பின்னணியுடன், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும், கோவை ஞானியினி 18 கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

நயனுறு நடைச்சித்திரம்

நயனுறு நடைச்சித்திரம், புதுகை மு. தருமராசன், புதுகை தென்றல், பக். 120, விலை 90ரூ. இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய ஆளுமைகளை பற்றிய, அறிமுக கட்டுரைகளின் தொகுப்பு, நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன், சி.சதானந்தன், செம்மொழிக் கழகம், முதல் தொகுதி,- பக். 480, விலை ரூ.300; இரண்டாம் தொகுதி- பக். 520, விலை ரூ. 300. பாமரர்களுக்கும் விளங்குமாறு எளிய முறையில் வாழ்வியல் உண்மைகளைக் கூறியோர் சித்தர்களே. கடவுள் சார்ந்து, மருத்துவம் சார்ந்து, உடல் சார்ந்து, உலகம் சார்ந்து பல தத்துவங்களை சித்தர்கள் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளை ஆய்வு செய்யும்பொருட்டு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட 158 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சித்தர் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், பக். 216, விலை 175ரூ. காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக போராடிய, ‘எவிடன்ஸ்’ கதிரின் அனுபவங்களே இந்த கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம், அநீதிகள் நடக்கும்போது, அமைதியாய் இருப்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பும். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

சிகரம் தொட்ட சாதனையாளர்கள்

சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் […]

Read more
1 77 78 79 80 81 88