நல்லவை நாற்பது

நல்லவை நாற்பது, இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 330, விலை 200ரூ. வள்ளலார், விவேகானந்தர், பரமஹம்சர், ரமண மாமுனி என்று ஆற்றல்சால், அருளாளர்கள் பற்றிய சுவையான கட்டுரைகள், ரசிகமணி டிகேசி, தொ.பொ.மீ. உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்ப் புலமை, பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார், சுரதா என்று பாரதி பாசறை, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், என்.எஸ்.கே., நாகேஷ் என திரைவித்தகர்களை வியந்தோதும் பாங்கு என்று நாற்பது நல்லவைகளை இந்நூலில் புகுத்தித் தந்துள்ளார்கள் பேராசிரியர்கள். நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. வள்ளலார் மீதான ஈடுபாடு நூலில் நிரூபணமாகியுள்ளது. பெற்றோர் போற்றுதல், தெய்வத் துணை, சான்றோரை மதித்தல், துணையை நேசித்தல், மரங்களைக் காத்தல், நட்பு போற்றுதல், நல்லோர் சேர்க்கை, தானம் கொடுத்தல், நல்லோர் மனத்தை நலம் பெறச் செய்தல் என்று வள்ளலார் வழி நின்று விளக்கியுள்ளது பயன்தரத்தக்கது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, தினமணி கட்டுரைகள், அ. அறிவுநம்பி, சித்திரம்,பக். 160, விலை 120ரூ. தினமணியில் வெளியான 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மொழி, சமூகம், நாடு தொடர்பான நூலாசிரியரின் தெளிவான கருத்துகள் இடம்பெற்றுள்ள இக்கட்டுரைகள், மிகவும் எளிமையானவை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “அறம் என்பதை முதலீடாகக் கொண்டு பொருள் சேர். இரண்டின் அடிப்படையில் இன்பம் தானாக வந்து சேரும்‘’ என்று வாழ்வதற்கான நெறிமுறையைச் சொல்வதும், “சொல்லில் இனிமை கலந்து பேசும்போது எதிரியும் நண்பனாவான்; மாறாக வன்மை கலந்து உரையோடும்போது நண்பன் கூட […]

Read more

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ. குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல். பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது […]

Read more

சங்க கால ஜாதி அரசியல்

சங்க கால ஜாதி அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 96, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர். ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் […]

Read more

எம்.ஜி.ஆர். கதை

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ. பத்திரிகை துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், 1987ல் ‘தேவி’ வார இதழில் ‘எம்.ஜி.ஆர். கதை’ என்று ஒரு வருடத்திற்கு மேல் எழுதிய தொடர், வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமா, அரசியல் போன்ற துறைகளிலும் இதன் தாக்கம் இருந்ததால், பிறகு ‘ராணி’ வார இதழிலும் வேறு பல செய்திகளுடன் இதே தலைப்பில் 70 வாரங்கள் இத்தொடர் வெளியாகி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிய நிறைகளை மட்டுமின்றி, […]

Read more

நினைவின் நிழல்கள்

நினைவின் நிழல்கள், மணா, கலைஞன் பதிப்பகம், விலை 195ரூ. இந்திய சிற்பங்களுக்கு ஒழுங்கு முறை மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’ பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி […]

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

தொன்மைச் செம்மொழி

தொன்மைச் செம்மொழி, பேராசிரியர் க. முத்துசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 256, விலை 190ரூ. பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம் மூன்று பிரிவுகளாக இருந்தது என்றும் இந்த நூலின் முதல் கட்டுரை தெரிவிக்கிறது. குமரி, ஆறு, குமரி மலை, பறுளி ஆறு பற்றியும், சிவன், திருமால், காளி முதலான வழிபாடு பற்றியும் தெரிவிக்கும் செய்திகள் நம் காதில் தேனாகப் பாய்கின்றன. தொல் தமிழ் எழுத்து தான் பிராமி எழுத்து என்றும் […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, ரவி வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லாஸ், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ, தற்கால சமய, பண்பாட்டு, அரசியலை விளங்கிக் கொள்ளும் நோக்குடன், அண்மைக் காலத்தில் கோட்பாடு ரீதியாக எழுச்சி பெற்ற பின் அமைப்பியல், பின் காலனித்துவம், விளிம்பு நிலை மக்கள் ஆய்வு முறை, பின் காலனிய மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவு ஜீவிகளின் விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more
1 79 80 81 82 83 88