அறிவியல் புதையல்

அறிவியல் புதையல், டாக்டர் குமார் கணேசன், இன் அண்டு அவுட் சென்னை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக எளிய தமிழில் எழுதப்பட்ட 20 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள், இந்திய வரலாற்று ஆய்வாளர் வி.பி. ராமராஜ், மணிமேகலைப் பிரசுரம், விலை 85ரூ. புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துக்களை உலகில் உள்ள அனைத்து இன மக்களும் படித்துப் புரிந்து கொண்டு […]

Read more

கழிந்தன கடவுள் நாளெல்லாம்

கழிந்தன கடவுள் நாளெல்லாம், தென்னம்பட்டு ஏகாம்பரம், பக். 136, விலை 125ரூ. ‘ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடுவதெல்லாம், விளையாட்டுப் பருவத்தில் ஆன்மிகம் முளைவிடுமறும் வழி என்று கூறும் இந்நூலாசிரியர், ஆரம்பத்தில் இறை மறுப்பு சிந்தனைக்கு ஆட்பட்டு 1972-74 வரை ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி, உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். ‘அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதன் இயல்பை அறிதலே ஆத்மஞானம்’ என்கிறது பகவத்கீதை. ஆனால், நாமே ஆத்ம ஞானத்தை […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ்.பி. எழிலழகன், சுரா பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, வ.உ.சி., பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை, அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களுடைய சாதனைகள், அவர்களுடைய நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபங்கள், நினைவிடங்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ள சிறந்த நூல். இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் இந்நூல் குறிப்பிடவில்லை. கொல்லிமலையில் புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மன்னனான வல்வில் […]

Read more

‘இந்து’ தேசியம்

‘இந்து’ தேசியம், தொ. பரமசிவன், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிராக… தொ. பரமசிவனின் இந்த நூல், கடந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் சந்தித்த தத்துவப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான ஒற்றைக் கலாச் சாரத்தையும் அதன் பின்னணியில் உள்ள சக்திகளையும் எடுத்து இழைஇழையாக அலசும் கட்டுரைகள், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்நாள் போராட்டங்களின் அடிநாதத்தை வலுவாக எடுத்துக்கூறுகின்றன. இன்றைய சமூக, அரசியல் சூழ்நிலையைத் தமிழ்ச் சமூக மரபின் பின்னணியில் அலசி ஆராயும் இந்நூல் […]

Read more

கம்பர் வைணவநெறி

கம்பர் வைணவநெறி, பாவலர் மணிசித்தன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட, இந்நூலாசிரியர் சிறந்த தமிழ் அறிஞர். இவர் கம்பர் குறித்தும், வைணவம் குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 11 கட்டுரைகள் உள்ளன. ஒரு குரங்கை, கம்பன் கண்ட மனிதனாக கூறுவதும் (பக். 3), கண்ணனைச் சரயு ஆற்று ஓட்டத்தில் காண வைப்பதும் (பக். 12), நம்மாழ்வார் பிரபந்தங்களை தழுவிக் கொள்ளும் கம்பரின் பாடல்களை விளக்குவதும் (பக். 23), சிவபெருமானின் பெருமைகளை விளக்கும், கம்பரின் பாடல்களைக் […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 180ரூ. கால்டுவெல் தொண்டு தமிழின் கல்வெட்டு திராவிட மொழி இயலின் தந்தை ராபர்ட் கால்டுவெல். 202 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்து, கிறிஸ்தவ சமயப் பணியாளராக, 1938ல் சென்னை வந்தார். மூன்று ஆண்டுகளில் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். வின் சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலான தமிழ் அறிஞருடன் இணைந்தார். 400 மைல் தொலைவு திருநெல்வேலிக்கு, சென்னையில்இருந்து நடந்தே சென்றார். தமிழ் மக்களை நேரில் கண்டு, அவரது மொழி, கலை, பண்பாடுகளை […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கவிஞர் ஞானக்கூத்தன், இமையம், அ. ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப்பருவம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இதன் மூலம் அக்காலத்தில் நிலவி வந்த பள்ளிக் கல்வியையும் அவை இக்காலத்தில் எப்படியெல்லாம் உருமாறி வந்துள்ளது என்பதையும் அறிய வைத்திருப்பது சிறப்பு. நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும், சு. ராஜு, உரத்தசிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆய்வுக்கூட முதன்மை விஞ்ஞானியான இந்நூலாசிரியர், நில அதிர்வு ஆய்வுகள் குறித்து இந்தியா முழுவதும் சென்று அரிய தகவல்களைத் திரட்டி வருபவர். இவரது பல ஆய்வு அறிக்கைகள் இத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன்தரத்தக்கவையாக உள்ளன. விஞ்ஞானியாக இருந்தாலும், எளிய தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் மிக்கவர். உரத்த சிந்தனை என்ற மாத இதழில் இவர் எழுதிய புவி அறிவியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே […]

Read more

நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ. என் பெயர் நம்பிக்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன். மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ. ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. […]

Read more
1 80 81 82 83 84 88