கவிதைக்குள் அலையும் மனச்சிறகு

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, கவிஞர் க. அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 10ரூ. கவிஞர் ச. அம்சப்ரியா பல்வேறு இதழ்களில் கவிதை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறுதொகுப்பு. இது 24 பக்கங்கள் கொண்ட கையேடு. ‘கவிதைக்குள் அலையும் மனச்சிறகு’ என்ற பெயரில் பல கவிஞர்களின் கவிதைகள் அர்த்தத்தோடு சிலாகிக்கப்பட்டுள்ளது. ராஜ சுந்தராஜன் எழுதிய ‘தழும்புகள்’ என்ற தலைப்பில்… அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம் வந்தது அப்படியும் வாழ்கிறோம் நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தன் மேனி […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 168, விலை 100ரூ. Master of all subjects – என்று பாராட்டப் பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணனின் வாரிசுதான் இந்நூலாசிரியர். இவரும் தன் தந்தையைப்போல தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள எழுத்தாளர். இதுவரை 85 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து, எம்.ஃ.பில்., பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றவர்களும் உண்டு. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்து உலக நாடுகளையும் சுற்றி வந்தரும்கூட. தினமலர் வார மலரின் முன்னேற்றமான வாழ்க்கைக்கு உரிய விஷயங்களைக் குறித்து, […]

Read more

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 17/8/2016.   —- செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக […]

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, கா. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 100, விலை 70ரூ. ஷேக்ஸ்பியர், கார்ல்மார்க்ஸ், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் போன்ற உலகளாவிய பெருமை மிக்க ஆளுமைகள் குறித்து இதுவரை அறியப்படாத தகவல்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய பிரபலங்களின் சிறப்புகள், பாரதியார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு என மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்து 22 அத்தியாயங்களில் கட்டுரை வடிவில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். நடுக்கோடையிரவுக் கனவு, வெனிஸ் […]

Read more

மதராஸாபட்டினம்

மதராஸாபட்டினம், தாழை மதியவன், இலக்கியச் சோலை, பக். 176, விலை 100ரூ. மதரஸாபட்டினம், சென்னப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ், (இன்று) சென்னை என அழைக்கப்படும் இப்பட்டணத்தின் வரலாறு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சென்னக் குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639-ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை-375, 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் சென்னப் பட்டினத்திற்குத்தான் வயது 376. நமது மதராஸப்பட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள பல நூற்றாண்டு நிகழ்வுகளைக் கூறுகிறது. இன்றைய புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் அதன் […]

Read more

மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார். இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி […]

Read more

இந்த நதி நனைவதற்கல்ல

இந்த நதி நனைவதற்கல்ல, தமயந்தி, பிரக்ஞை வெளியீடு, பக்.164, விலை ரூ. 130. ஒரு பெண், தன் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, சமூகப் பார்வையோடு ஆராய்வதே “இந்த நதி நனைவதற்கல்ல‘’. சட்டங்களாலும், நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்களின் மீதான வன்முறை குறித்து பேசும் நூலாசிரியர், தனது ஒவ்வொரு கட்டுரையிலும் தான் படித்த, சந்தித்த பெண்களின் பிரச்னைகளைத் தன் உக்கிரமான சொல்லாடலால் உணர வைக்கிறார். வாசகரின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார். மறக்கப்பட்ட வழக்குகள், சமூக அதிகாரக் கட்டமைப்புகள், குடும்பம் முதல் […]

Read more
1 82 83 84 85 86 88