கறுப்புக் குதிரை

கறுப்புக் குதிரை, நரேன் ராஜகோபாலன், நவி பதிப்பகம், விலை 150ரூ. 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல், ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது. கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் […]

Read more

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, […]

Read more

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைத் போல், இன்று நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், லஞ்சம், […]

Read more

தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர்: கு.வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக்.122, விலை ரூ.100. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை விரிவாக இந்நூல் […]

Read more

நகலிசைக் கலைஞன்

நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு […]

Read more

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த […]

Read more

உடலும் உணவும்

உடலும் உணவும், டாக்டர் எஸ். அமுதகுமார், தினத்தந்தி பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய ‘உடலும் உணவும்’ என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

இந்தியாவின் தோற்றமும் வரலாறும்

இந்தியாவின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ராமன், கவிதா பப்ளிகேஷன், பக். 352, விலை 250ரூ. ‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார். ‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, பக். 158, விலை 120ரூ. மொழி, சமூகம், நாடு, மானிடர், தனி மாந்தர் ஆகிய தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறை, பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பு, மதுரையின் கடம்பவன பழமை, வரதட்சணை என்ற வியாபாரம், காலதாமதத்தைப் போக்கும் மனக்கட்டுப்பாடு, மரபுகளின் மாற்றத்தால் நன்மையா? தீமையா? என்பதைப் புலப்படுத்தும் மரபுக் கட்டுரை, தமிழுக்கு ஒளி கூட்டிய வ.சு.ப. மாணிக்கனார், அறிவியல் கூத்து, […]

Read more
1 76 77 78 79 80 88