என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

தூக்கு மர நிழலில்

தூக்கு மர நிழலில், சி.ஏ. பாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 120ரூ. பொதுவுடமை சித்தாந்தத்தை உடல், பொருள், ஆவியாகக் கருதிய உண்மையான கம்பூனிஸத் தோழர்களில் சி.ஏ. பாலனும் ஒருவர். மக்கள் நலனுக்காக 15 ஆண்டு, 9 மாதம், 21 நாள்கள் சிறைக் கொட்டடியில் தன் வாழ்நாளைக் கழித்து, மரணத்தின் வாசல் வரை சென்று உயிரோடு மீண்டு வந்த அவரின் நீண்ட, நெடிய மிகக்கொடுமையான சிறை அனுபவமே தூக்கு மர நிழலில். இது 1976இல் புத்தகமாக வெளியானது. […]

Read more

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ. இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் […]

Read more

மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. பாரதத்தில் தோன்றிய வேத மகரிஷிகள், தெய்விக புருஷர்கள், மகான்கள், சாதுக்கள் போன்றோரின் வாழ்க்கை நெறி, இறைவனிடம் மகான்கள் கொண்ட பக்தியின் பெருமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இதில் கபீர் தாசர், துளசி தாசர், புரந்தர தாசர், ஸ்ரீ ராகவேந்திரர், மீரா பாய், சக்கு பாய் ஆகிய 31 மகான்களின் ஆன்மிக சரித்திரம் அடங்கியுள்ளது. பத்து வயது சிறுமியான சக்கு பாய் தோழியருடன் மணல் வீடு கட்டி விளையாடுகிறாள். […]

Read more

உள்ளத்திறப்பு

உள்ளத்திறப்பு, பெரணமல்லூர் சேகரன், பக். 154, விலை 100ரூ. 22 சிறுகதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. அரசியல் களத்தில் மக்களை முட்டாளாக்க நினைக்கு அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் ஓட்டு, வாசகர்கள் மனதில் சிகரமாக உயர்ந்து நிற்கும் எழுத்தாளரின் நிஜத்தை அறிந்தபோது மண்குதிரை ஆகிப்போன மாயமும், கடனை வாங்கி அல்லல்பட்டு வீட்டைக் கட்டினால் இல்லத்திறப்பு விழாவுக்கு வரும் சொந்த பந்தங்கள் சுலபமாக விமர்சனம் செய்துவிட்டு போகும் உள்ளத்திறப்பு, பெண்களின் நிலையையும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களையும், வலிகளையும் சொல்லும் மீறல், கிணற்றுத் தவளைகளை வானத்துப் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more

பிஸினஸ் மகாராணிகள்

பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ. தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பத்திரிகை என்று எழுத்துலகில் பன்முகத்தன்மையுடன் பயணிக்கும் இந்நூலாசிரியர், பல்வேறு சமயங்களில் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை வாசிக்கும்போதே இவருக்கு பாரதி மீதுள்ள ஈர்ப்பை உணர முடிகிறது. பாரதியும் பாரதமும், பாரதியும் இஸ்லாமும், பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் முதலான கட்டுரைகளில் மட்டுமல்ல, இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலுமே பாரதியின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதி, வ.வே.சு.ஐயர், கல்கி, […]

Read more

ஃபேஸ்புக் பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ. முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி […]

Read more

மன்மதக் கொலைகள்

மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை, பக். 144, விலை 99ரூ. துப்பறியும் நாவல்களைப் படிப்பதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதையில் வரும் சம்பவங்கள், அதில் இடம் பெறும் மாந்தர்கள், திருப்புமுனைகள், கிளைமாக்ஸ் அத்தனையும் அன்றாட வாழ்வில் நடந்தவை போலவே தோன்றுவதால் கூடுதல் ஈர்ப்பு எழுகிறது. படிப்போர் ஒன்று நினைக்க அதன் திருப்புமுனைகளும் கிளைமாக்ஸும் அமைந்துள்ளன. மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தப்பிக்க முயலும் தயாளனை, காவல்துறையினர் பொறிவைத்துப் பிடிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஒரு திருப்புமுனைதான். 2007ல் சென்னையில் […]

Read more
1 580 581 582 583 584 841