துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள், ஜே.எஸ். ஏப்ரகாம், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 60ரூ. மனோபாவத்தை மாற்றிக்கொண்டால், பிரச்னைகள் குறையும் என்பதை, மன இயல் முறையில் விளக்கும் நூல் இது. துன்பங்களை எதிர்கொண்டால், அதை இயல்பாக வெல்லலாம் என்ற, பல கருத்துகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர், 13/4/2014.

Read more

கண்ணன் கழல்கள் பணிமினோ

கண்ணன் கழல்கள் பணிமினோ, எஸ். சுதர்சனம், ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா டிரஸ்ட், விலை 100ரூ. கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும்விதம் சிறப்பானது. ஆயர்பாடியில் யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும் அடையவில்லை. யசோதை பெற்ற இன்பத்தை பெற இயலவில்லையே என்று புலம்புகிறாள் தேவகி. நந்தன் பெற்றனன், நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே […]

Read more

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள், மன்மதநாத் குப்தா, கி. இலக்குவன், அலைகள், பக். 560, விலை 320ரூ. இந்தியா சுதந்திரம் பெற, காந்திஜி அகிம்சை வழியில் போராடியபோது, அவர் முறைக்கு முற்றிலும் எதிரான வழியில் புரட்சியாளர்கள் பலரும் போராடினர். பகவத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற தீவிர புரட்சியாளர்கள் உறுப்பினராய் இருந்த அந்த அமைப்பு, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் என்று, பிற்காலத்தில் பெயர் பெற்றது. ஆரம்ப காலத்திலிருந்தே காந்தியின் வழியில் நம்பிக்கை இழந்தவர் இந்நூலின் மூல ஆசிரியரான மன்மதநாத் குப்தா. அவரது, 13வது வயதிலேயே முதல் […]

Read more

சங்கீத மும்மூர்த்திகள்

சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக். 80, விலை 75ரூ. இசையால், இறைவனை இசைய வைத்து, இறைவனை மட்டுமல்லாமல் கேட்பவர் அனைவரையும் அன்றும் இன்றும் என்றும் பரவசப்படுத்த முடிந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரது வாழ்க்கைச் சரிதங்களை எத்தனைபேர் எழுதி, எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. அந்த வகையில் இந்நூலாசிரியர், அவர்களது சரிதங்களை, மிக எளிய அழகான முறையில், அற்புதமாக எழுதியிருக்கிறார். இத்துடன் தியாகராஜ சுவாமிகளிடம் அபார […]

Read more

தட்டுங்கள் திறக்கும்

தட்டுங்கள் திறக்கும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம். விலை 70ரூ. முதலில் நாம் மாற வேண்டும். பிறகுதான் மற்றவர்களை மாற்ற முன்வரவேண்டும் போன்ற பல்வேறு சுயமுன்னேற்ற கருத்தகள், அறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 13/4/2014.   —-  

Read more

மறைக்கப்பட்ட இந்தியா

மறைக்கப்பட்ட இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 352, விலை 275ரூ. தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர், திரைப்படம், பத்திரிகை, நாடகம் என பல தளங்களில் இயங்கி வருபவர் இந்நூலாசிரியர். ஜுனியர் விகடனில் எனது இந்தியா எனும் தலைப்பில் தொடராக வெளிவந்து நிரம்ப வரவேற்பைப் பெற்றது இது. வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சமூக அக்கறையோடும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழில் இத்தகைய நூல் இதுவரை வெளிவந்ததில்லை. ஆதலின் இது ஒரு புதிய முயற்சி. நாட்டு விடுதலைக்காக ரகசிய வானொலி நடத்தியதால், […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள். இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘   —- மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு. பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை […]

Read more

பறவைகள்

பறவைகள், அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை, க்ரியா. ஒரு வித்தியாசமான பறவையைப் பார்க்கிறீர்கள். அது என்ன வகை, அதன் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இந்த நூல் கைகொடுக்கும். பறவைகளின் அடையாளம், பறவைகளின் பெயர்கள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்வகையில் படங்களும், பெயர்களும் தரப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 22/4/2014.   —- தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம். தமிழர் பண்பாட்டில் பண்டைக்காலம் தொட்டுத் தாவரங்கள் பெற்றுவந்த முக்கியத்துவம், பண்பாட்டுத் தொடர்புகள், பெற்ற பொருளாதார நலன்களை விரிவாகவும் […]

Read more

இயற்கை செய்திகள் சிந்தனைகள்

இயற்கை  செய்திகள் சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை. இயற்கை, காட்டுயிர்கள், பறவைகள், தாவரங்கள், எனச் சூழலியல் சார்ந்த அனைத்தைப் பற்றியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சிய நூல் இது. துறைசார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் பார்வை, சுவாரசியத் தகவல்கள் அடங்கிய அற்புத நூல். நன்றி: தி இந்து, 22/4/2014.   —- ஏழாவது ஊழி, பொ. ஐங்கரநேசன், சாளரம். தற்காலச் சூழலில் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளின் அடிப்படையில் எழுதும் பொ. ஐங்கரநேசன், தற்போது இலங்கை வடக்கு மாகாணத்தின் […]

Read more

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம். சூழலியல் எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.  தமிழகத்தில் சுற்றுச்சூழலில் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம். நன்றி: தி இந்து, 22/4/2014.   —-   அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி. மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் […]

Read more
1 686 687 688 689 690 841