சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, அது தொடர்பான இடங்களுக்கு நேரில் சென்று அனுபவ பூர்வமாக எழுதப்ட்ட ஒரு இலக்கியப் பயண நூலாகும். கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் பாழடைந்து கிடக்கும் கண்ணகி கோட்டத்தை தரிசித்து வரவேண்டும் என்ற ஆசையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது. இது சிறந்த நூல். சிலப்பதிகாரத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- குறள் கூறும் ஊழும் கூழும், கி. ராமசாமி, […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ. மகாபாரதத்தின் மகா புருஷரான கண்ணன் பற்றிய கதைகளை சுவாட தொகுத்துத் தந்துள்ளார் வேளுக்குடி கிருஷ்ணன். மாருதி வரைந்துள்ள வண்ணப் படங்கள், புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —-   இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம், ஆப்பிள் பள்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 80ரூ. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி பச்சிலைகளுக்கு உண்டு. துளசி, வல்லாரை, கறிவேப்பிலை, நொச்சி இலை உள்பட 20 பச்சிலைகளின் மருத்துவ குணங்க9ளை […]

Read more

மனதிற்கு மருந்து ஆல்பா

மனதிற்கு மருந்து ஆல்பா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மனம் சக்தி மிக்கது. அதை சரியான பாதையில் இயக்க நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு தியானப்பயிற்சி மிக முக்கியமாகிறது. இதன்மூலம் கிடைக்கும் மனவலிமையால் வாழ்க்கையில் ஏற்படும் தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதனை மையமாக வைத்து டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- மாசறு கற்பினாள் அகலிகை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரும் கிளைக் […]

Read more

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ. மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 140, விலை 100ரூ. ரஷ்யாவுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா இன்று என்ன நிலைமையில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் சுவைபட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித குலத்தின் நன்மைக்கு ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இருந்த ஆட்சியே ஓர் உதாரணம். அந்த அடித்தளத்தில் இருந்துதான் இன்று சோவியத் […]

Read more

புலி தடம் தேடி

புலி தடம் தேடி, ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 192, விலை 100ரூ. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக எந்த அளவுக்கு இனவெறித் தாண்டவமாடுகிறது என்பதை நூலாசிரியர் தோலுரித்துக் காட்டியுள்ளார். இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள் தங்களது தாய் மண்ணிலேயே ராஜபட்சவின் இனவெறி அரசால், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, இன்று உணவுக்கே வழியில்லாமலும், உயிருக்கு உத்தரவாதமில்லாமலும் வாழ்வதை உலககுக்கு உரக்கத் தெரிவித்துள்ளார் நூலாசிரியர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் […]

Read more

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1, தந்தி பதிப்பகம், சென்னை. விலை 360ரூ. தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் என்ற மெகாத் தொடர் வெளியானபோது, அதில் தமிழ் சினிமா வரலாறு இடம் பெற்றது. சாதனை படைத்த படங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் அல்லாது, புகழ் பெற்ற கலைஞர்களின் வாழக்கை வரலாறுகள் அபூர்வமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டன. இதனால் பெரிதும் கவரப்பட்ட வாசகர்கள், சினிமா வரலாற்றை புத்தகமாக வெளியிடவேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இதனால், தமிழ் சினிமா வரலாற்றை 3 புத்தகங்களாக வெளியிட முடிவு செய்த தினத்தந்தி, […]

Read more

ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம், வ. பாரத்வாஜர், காவ்யா, சென்னை, பக். 376, விலை 340ரூ. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நம் நாட்டில் ஆரியம், திராவிடம் என இரு பிரிவுகளாக இந்தியத் தத்துவ மரபுகள் விரிந்துகிடக்கின்றன. இந்நூல் கட்டுரைகளில் ஆரியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசப்படுகின்றது. இந்தியாவின் சமூகம், அரசியல், சமயம், கலாசாரம், மொழிகள், இனம், வரலாறு என எது குறித்தும் பேசினாலும் ஆரியம், திராவிடம் என இந்தியம் அதில் […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 192, விலை 110ரூ. மௌனி தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் அசல் தொடக்கப்புள்ளி. அவர் எழுதி வெளிவந்துள்ள 24 சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. நுட்பமான பார்வைகள், மன விகசிப்புகள், துல்லியமான உணர்வுகள், வியக்க வைக்கும் படிமங்கள் இவைதான் மிகுதியும் இக்கதைகளில். தன்னைச் சந்திக்க வரும் நண்பனிடம் தனது காதல் அனுபவத்தை விவரிக்கும் அழியாச்சுடர் விரும்பாத நண்பனுடன் பயணம் செய்ய நேர்ந்துவிடும் ஒருவனின் மனவோட்டங்களைப் பதிவு செய்யும் அத்துவான வெளி, […]

Read more
1 687 688 689 690 691 841