வடலூர் வாய்மொழி

வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த  நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், பக். 136, விலை 90ரூ. பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் ந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7000 என்ற நூலில் விவரித்து உள்ளார். போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது பரகாய பிரவேச சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் […]

Read more

யாருக்காக இந்தியா

யாருக்காக இந்தியா?, ஆர். நடராஜன், ஆதாரம், பக். 367, விலை 225ரூ. டாக்டர் ஆர். நடராஜன், தினமலர், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதில் பிரதமருடன் பேட்டி என்ற கட்டுரை துவங்கி, மொத்தம் 80 கட்டுரைகள் உள்ளன. இவை 2012, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. நூலின் துவக்கத்தில் சர்வ வீரிய சர்வாக்ரக, சர்வ வியாபியான இத்தாலிய ஜனன, இந்திய பிரஜா ஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம் என ஆசிரியர் தனி கட்டம் போட்டு குறிப்பிட்டுள்ளார். […]

Read more

முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ. இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-058-1.html கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, 20ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையிலான, தமிழ் சமூகத்தின், அரசு அதிகாரத்திற்கு எதிராக, கலகத்ததை ஏற்படுத்திய வெகுமக்களின் வரலாற்றை, முச்சந்தி இலக்கியம் எனக் கூறப்பட்ட, குஜிலி இலக்கியங்கள், தன்னுள் கொண்டுள்ளன. அவை, மலிவான அச்சில் பதிப்பிக்கப்பட்டு, காலணா, அரையணாவிற்கு மக்கள் கூடும் இடங்களில் விற்கப்பட்டன. இந்த இலக்கியத்தை அறிமுகம் செய்வதோடு, அதை பற்றிய தெளிவுகளை நமக்கு […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், தொகுப்பு-தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக்குழு, பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் பிறந்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய படைப்புகளின் அரிய தொகுப்பு ஒன்றை வெளியிட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அடிகளார் ஒன்றே உலகம் என்னுந் தலைப்பில் தாம் பயணம்போய் வந்த 21 நாடுகளைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். பொழுதுபோக்காக ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட ஆவணப்பதிவாக […]

Read more

அவமானம்

அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ. மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

கல்கியின் சிறுகதை

கல்கியின் சிறுகதை, பாகம்  2, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 640, விலை 345ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-226-7.html புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என பன்முகத்திறமைகளைப் பெற்றிருந்ததோடு, வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், விளங்கிய கல்கியின் 40 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பாங்கர் விநாயக ராவ் என்ற நாடகமும் இ8ணைக்கப்பட்டுள்ளது. தேவகியின் கணவன், பவானி பி.ஏ.பி.எல்., புன்னை வனத்துப் புலி, மாடத்தேவன் சனை போன்றவை நீண்ட சிறுகதைகளாகும். விடுதலைப் போரில் நேதாஜியின் வீரதீரங்களை நினைவுகூரும் அமர […]

Read more

சிற்பியின் படைப்புலகம்

சிற்பியின் படைப்புலகம், முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 198,விலை 100ரூ. பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முக படைப்புகளை படம் பிடித்துக் காட்டும் பத்து முத்தான கட்டுரைகளே இந்த புத்தகம். பாரதிதாசன் போற்றிய படைப்பாளியான சிற்பியின் படைப்புத்திறனை தங்கள் ஆய்வு திறத்தாலும் படைத்து அளிக்கும் திறமையாலும், சொல் ஆற்றலாலும், நமக்க விருந்து படைக்கின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் படிப்போருக்கு இது சுவாரஸ்யம் தரும். சிற்பியின் பல புத்தகங்களை படித்த உணர்வு, இந்த ஒரு புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கிறது. -ஜிவிஆர். நன்றி: […]

Read more

சுதந்திர வேங்கை

சுதந்திர வேங்கை, கவுதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 312, விலை 220ரூ. பூலித்தேவனின், வீர வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள சரித்திர நாவல். மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால், பூலித்தேவனின் வீரம் மெச்சப்படுகிறது. காலமாற்றம், ஆற்காட்டு நவாபுகளால் ஏற்படும் அரசிய்ல மாற்றம், ஆங்கிலேயர் கை ஓங்குதல், பாளையக்காரர்களின் எதிர் யுத்தம் மற்றும் வீழ்ச்சி எல்லாம் விரிவாகப் பேசப்படுகிறது இப்புதினத்தில். நவாப் மற்றும் ஆங்கிலேயர் சார்பில், நெல்லைச் சீமையில் வரி வசூலிப்பு தர்பார் நடத்தும் மருதநாயகம், பூலித்தேவனை அடக்கவோ, […]

Read more
1 685 686 687 688 689 841