குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை […]

Read more

ஆலிஸின் அற்புத உலகம்

ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், வம்சி, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-144-4.html தோட்டத்துக்குச் செல்லும் சிறுமி ஆலிஸ், ஒரு முயலைப் பின்தொடர்ந்து அதன் வளைக்குள் செல்கிறாள். அங்கே முயலுக்கு ஒரு வீடே இருக்கிறது. அங்கே ஒரு பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்தவுடன் சின்னஞ்சிறியவளாகச் சுருங்கிப் போகிறாள் ஆலிஸ். பிறகு ஒரு கேக்கைச் சாப்பிடும்போது பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறாள். இப்படியே கதை முழுவதும் அவள் சிறியவளாவதும், பிறகு வளர்வதுமாக இருக்கிறாள். நிறைய கதவுகள் வருகின்றன. […]

Read more

கலிவரின் பயணங்கள்

கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், தமிழில் யூமா வாசுகி, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 260ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-199-8.html கலிவருக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார். களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் […]

Read more

தீப்பறவையின் கூடு

தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்), தமிழில் திலகவதி, அம்ருதா பதிப்பகம், சென்னை, பக். 186, விலை 120ரூ. ஷ்ர்லி, சல்மான் ருஷ்டி, ஜான்ஸ்டேன் ஜான்சன், ஆன்டன் செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஐஸக் பாஷெவிஸ், சிங்கர், பிரதிபாரே, பென் ஓக்ரி, லூவிஸ் எட்ரிச் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் நூல். அந்நிய நாட்டின் மோகத்தால் தாய் நாட்டை பழிப்பதில் எதிர்காலத் தலைமுறை அடையும் பிரச்னைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் சோகம், காதலின் பிரிவு, இப்படிப் பல கருத்துகளை […]

Read more

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு, நாகர்கோவில், பக். 432, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-505-3.html உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு, வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன்பாப்டிஸ்டி ஸே, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் பொருளாதாரக் கெள்கைகளை விவரிக்கும் நூல். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆடம் ஸ்மித் 1776இல் எழுதிய […]

Read more

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இரா. வெங்கடேசன், இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-012-8.html செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது. பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்ததமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் சி.வை. தாமோரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை. தமிழ்ப் பெரியோர்கள் அயராத […]

Read more

புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்

புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள், பதிப்பாசிரியர் இரா. மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 152, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-784-0.html தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பதினான்கு சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் பெயரைச் சொன்னதுமே ஒரு வாசகனின் நினைவில் வரக்கூடிய காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம் போன்ற கதைகளும் ஒரு விமர்சகன் குறிப்பிடக்கூடிய சாப விமோசனம், இது மிஷின் யுகம், வாடா மல்லிகை போன்ற கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. […]

Read more

கோட்டை வீடு

கோட்டை வீடு, ம. காமுத்துரை, மருதா, சென்னை, விலை 100ரூ. காமுத்துரையின் மூன்றாவது நாவல் இந்த கோட்டை வீடு. ஒவ்வொருவரது மனதிலும் இருக்கிற கோட்டை வீட்டிற்கு இந்நாவல் உங்களை அழைத்துச் செல்லும் என முன்னுரையில் காமுத்துரை கூறியிருப்பது உண்மையே. நாவலைப் படித்தவுடன் நமது வீட்டின் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி நினைவு வராமல் யாரும் தப்ப முடியாது. மனசை சற்றுப் பிசையத்தான் செய்கிறது. பேரனின் மூலம் கதை சொல்லப்படுகிறது. தாத்தா இறந்த பிறகு ஒரே மகளிடம் வந்து சேரும் ஆயா பற்றிய கதை. ஆயாவிற்கு […]

Read more

கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்

கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல், மன்னர்மன்னன், முத்துப் பதிப்பகம், விழுப்புரம், பக், 484. பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு அந்த நூலின் இருந்து சில பகுதிகள் இளமை காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலை ஒன்றை இப்படிச் சொல்வார் பாவேந்தர்- கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் நான் ஆசிரியராகப் பணிபுரியப் போனேன். அந்த ஊருக்குப் போவதற்கு முன்பே என்னைப் பற்றிய கீர்த்தி எட்டிவிட்டது போலும். புதுவையின் அரசியல் கட்சிக்காரர்கள், என்னைப் பற்றி ஒரு வரலாற்றைக் கூறி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் வேலை செய்யும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் என்னிடம் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more
1 684 685 686 687 688 841