மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை, விலை: ரூ.300. ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 08.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000000330_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

சோழன் ராஜா ப்ராப்தி

சோழன் ராஜா ப்ராப்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அந்திமழை, விலை 140ரூ தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தனது அரசியல் வாழவிலும் அன்றாட நடைமுறையிலும் சந்தித்துப் பழகியவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர், இளையராஜா, சோழ மன்னர் ராஜராஜன் உள்பட பலர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறந்த கட்டுரைகளாக ஆக்கித் துந்து இருக்கிறார். அரசியல்வாதி என்றாலும், கட்சி அரசியல் வாடை எதுவும் இல்லாமல் அவர் தந்து இருக்கும் கட்டுரைகள், அனைத்து தரப்பினரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளன. […]

Read more

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ. ஊர் நினைவுகள் பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர். பால்யமும் […]

Read more

இயர்புக் 2019

இயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. பொது அறிவுப் பெட்டகம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் பலனடையும் விதத்தில் நக்கீரன் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் இயர்புக் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நூலில் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டுகள், உலகம் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1120 பக்கங்கள் கொண்ட இந்நூல் 160 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழ் வழியில் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு எளிமையான […]

Read more

அகப்பறவை

அகப்பறவை, பூங்குழலி வீரன், அகம் பதிப்பகம், விலை 100ரூ. மரங்களைப் பாடுதல் மரங்கள், மழை, கவிதை குறித்த அனுபவங்கள் இவற்றால் ஆனது மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனின் அகப்பறவை என்னும் இக்கவிதைத் தொகுப்பு. மரங்களை தன் உறவுகளாகவும், அவற்றின் பதியன்களை பிரியத்தோடும் நோக்கும் இவரது உலகில் இலைகள் வீழ்வதும் சூரியன் மேற்கே வீழ்வதும் ஒருங்கே நிகழ்கையில் அன்பு முகிழ்கிறது. தொலைபேசியில் இருக்கும் எண்களில் இருந்து இறந்தவர் யாராவது அழைத்துவிடும் அச்சம் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது -என்கிறார் பூங்குழலி. நம் தொலைபேசியில் இருக்கும் இறந்துபோனவர்களின் […]

Read more

ஈழம் 87

ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ. ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ். 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த […]

Read more

என் பெயர் கதை சொல்லி 1

என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]

Read more

அகமுகம்

அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த […]

Read more
1 2 3 12