வானத்தைப் பிளந்த கதை – ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பா. ஜீவசுந்தரி, அரிவை வெளியீடு, 88/27, பாரதி முதல் குறுக்குத் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர், சென்னை – 58, விலை 120 ரூ. பெண் விடுதலையின் முன்னோடி. திராவிட இயக்க முன்னோடிகளின் வரலாற்று நூல்கள் அரிதாகவே உள்ளன. இந்நிலையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நூல் கவனத்துக்குரியது. காங்கிரஸிலும் பிறகு சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றி தமிழகம் முழுவதும் பகுத்தறிவு, பெண் விடுதலைக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் கொள்கைகள் அக்காலப் பெண்களிடம் வெகுவாகப் பரவக் காரணமாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை […]

Read more

அமுதே மருந்து

கல்விச் செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மகேஸ்வரி பதிப்பகம், 12, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 116. தமிழக முதல்-அமைச்சராக பதவி  வகித்தபோது கல்வி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றினார்.  புதுப் பள்ளிக்கூடங்களை  ஏராளமாகத் திறந்தார். மதிய  உணவுத் திட்டத்தைக் கொண்டு  வந்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின்  வாழ்க்கை வரலாற்றை சுவைபடி  எழுதியுள்ளார். ஈசாந்திமங்கலம்  முருகேசன் இளைய  தலைமுறையினர் அவசியம்  படிக்க வேண்டிய புத்தகம். — கண்ணீரில் மிதக்கும் கதைகள்,  டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமிஞ்சிக்கரை,   சென்னை 29, விலை 80ரூ வரலாற்று நூல்களையும்,  ஆராய்ச்சி […]

Read more

இரவைப் பருகும் பறவை

இரவைப் பருகும் பறவை ஆசிரியர் – லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம் 667, கே. பி. சாலை நாகர்கோவில் மு. ப. நவ. 2011 பக்கங்கள் 80 விலை 70ரூ. பிரியத்தால் நிரப்பிய குவலை மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரியும் லாவண்யா சுந்தரராஜன் எழுதியிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இரவைப் பருகும் பறவை. தமிழ்ச்சூழலில் பெண் கவிதைகளுக்கென ஒரு சிலந்தி வலை பிண்ணப்பட்டுள்ளது. அந்த வலைக்குள் அகப்படாத கவிஞர் லாவண்யா. தனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கிக்கொண்டு அதன் அடுத்த கட்டத் தேடலாகத்தான் இவரது கவிதைகள் […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more
1 2 3