1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள், பெஸ்ட் போட்டோ கிராபி டுடே, பக். 196,விலை 200ரூ. புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டுடே குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம்தான், இந்த நூல். வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள் படம் எடுத்தாலும், சுற்றுச்சூழலுக்கு இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு அறிமுகமும், தொடர்பும் இல்லாத நிலை இருப்பதால், வீண் அலைச்சல், செலவு […]

Read more

பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்

பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம், முனைவர் தா. நீலகண்டப் பிள்ளை, செம்மூத்தாய் பதிப்பகம், சென்னை 59, பக். 266, விலை 450ரூ. தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை 33 ஆய்வுக் கட்டுரைகளில் இந்த நூல் அழகுடன் விளக்குகிறது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் சமயச் செய்திகளை ஆதாரப் பாடல்களுடன் கட்டுரைகள் அருமையாய் விளக்குகின்றன. இயற்கை, விலங்கு, அணங்கு, பெருதெய்வம், சிறுதெய்வம், பலியிடம், […]

Read more

தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் […]

Read more

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html 1790ம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான், முதன்முதலாக, முல்லை பெரியாற்றில், அணை கட்டுவது குறித்து சிந்தித்தவர். அதையடுத்து, 1876-78ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம்தான், பிரிட்டிஷ்காரர்களை, முல்லை பெரியாறு அணை கட்டுவதை துரிதப்படுத்தியது என, ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். கடந்த 1807ம் ஆண்டு துவங்கி 1870ம் ஆண்டு வரை ஜேம்ஸ் கார்ட்வெல், […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், […]

Read more

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா, எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், சென்னை, பக். 888, விலை 500ரூ. சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர், பிரம்மாவின் புத்திரர். ஜோதிட ஞானத்தின் கரையற்ற கடல் போன்றவர் என போற்றப்படுபவர். அவர் வடமொழியில் இயற்றிய இந்த நூல், மிக எளிமையாகவும், அருமையாகவும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு லக்னத்திற்கு, 108 வித பலன்கள். இப்படி 12 லக்னங்களிலும், ஒன்பது கிரகங்கள் இருப்பதால் விளையும் பயன்கள் என, 1296வித பலன்களை, பிருகு முனிவர் இந்த நூலில் […]

Read more

படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன்

படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன். பாடலாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடகர், கிராமிய இசையமைப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் பாவலர். அவரைப் பற்றி கே.டி.கே. தங்கமணி, எம். கல்யாண சுந்தரம், நல்லகண்ணு, ஐ. மாயாண்டி பாரதி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலை சங்கை வேலன் தொகுத்துள்ளார். பொதுவுடைமைக் கருத்துகளில் பாவலர் வரதராஜன் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது படைப்புகள், […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

உழைப்பின் நிறம் கருப்பு

உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ. அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் […]

Read more
1 160 161 162 163 164 223