இருவேறு உலகங்கள்

இருவேறு உலகங்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலை 350ரூ. இன்றைய இந்திய சமுதாயம் வறுமை, அறியாமை, தீண்டாமை போன்ற ஒரு உலகத்திலும், அறிவுடைமை, செல்வச்செழிப்பு, வெறுப்பு என்ற இன்னொரு உலகத்திலும் பயணித்து கொண்டிருக்கிறது என இருவேறு உலகங்கள் என நாவலை படைத்துள்ளார் ஆசிரியர். சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் நாடு பிரிந்து கிடப்பதையும், தீண்டாமை என ஒடுக்குமுறையால் தலித் மக்கள் தனித்து நிற்பதையும் படம் பிடித்து காட்டுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

நாட்டுக்கொரு பாட்டு

நாட்டுக்கொரு பாட்டு, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தி இந்து தமிழ், விலை 170ரூ. உலக நாடுகளின் தேசிய கீதம் உருவான விதம் பற்றி தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் இணைப்பிதழில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 43 பிரபல நாடுகளின் தேசிய கீதம் குறித்து பலரும் அறிந்திராத விஷயங்கள் சுவைபட திரட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு வித தகவல்களை நூலாசிரியர் பதிந்திருப்பதும், பாடலை தமிழாக்கம் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம். குறிப்பாக பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் […]

Read more

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்.

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்., கமலா கந்தசாமி, தமிழன் குழுமம், விலை 200ரூ. ‘குன்றனைய பொருள் சேர்த்துக் கொடுத்து புகழ் வளர்த்தோன்’ என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப் பெற்ற எம்.ஜி.ஆரைப் பற்றிய இந்த நூல், அவரது வாழ்க்கை, சினிமா, அரசியல், கொடை உள்ளத்தை படம்பிடித்து காட்டி உள்ளது. குறிப்பாக அவர் யார், யாருக்கெல்லாம் குறிப்பறிந்து உதவி செய்து இருக்கிறார் என அறிகிறபோது வியப்பாக இருக்கிறது. தன்னை துப்பாக்கியால் சுட்ட எம்.ஜி.ஆர்.ராதாவைக்கூட, “என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்களே” என்று தான் கேட்டார் என்ற பண்பு நலனும் வியப்புக்கு […]

Read more

இடம் பொருள் மனிதர்கள்

இடம் பொருள் மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் பதிப்பகம், விலை 130ரூ. வாழ்க்கை என்னும் நெடும் பயணம் நமக்கு அளித்து செல்லும் அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவுகள் எப்போதும் சுகமானவையாகவே இருக்கும். அப்படி சக மனிதர்கள், பொருட்கள், இடங்கள் போன்றவற்றால் தனக்கு ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களை இங்கே சுவையாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நகைச்சுவை உணர்வுடன் கருத்தையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை படிக்கும்போது நமது வாக்கை அனுபவங்களும் கண்முன்னே வந்து செல்வது சிறப்பு. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000027077.html […]

Read more

மாயமனிதன்

மாயமனிதன், எச்.ஜி.வெல்ஸ், தமிழில் புவியரசு, சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நவீன அறிவியலுடன், கற்பனையையும் சேர்த்து எழுதப்படும் கதைகள் எப்போதும் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படி ஐரோப்பிய இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவல், தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டு உள்ளது. நாவலை படிக்கும்போதே அதன் காட்சிகள் மனதில் இழையோடுகின்றன. விறுவிறுப்பும், திகிலும் கூட்டும் இந்த நாவல் படிப்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

1001 இரவு அரபுக் கதைகள்

1001 இரவு அரபுக் கதைகள், தொகுப்பு ஏ.சோதி, நன்மொழிப் பதிப்பகம், விலை 500ரூ. யார் எழுதினார்கள் என்பதே தெரியாத, மிகப் பழங்காலக் கதைகளின் தொகுப்புதான் 1001 இரவு அரபுக் கதைகள். வீர சாகசம், மாயமந்திரம், காதல், நன்னெறி, நகைச்சுவை என்று பலதரப்பட்ட குணநலன்களை உள்ளடக்கிய, படிக்கப் படிக்கத் தெவிட்டாத கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் ஏ.சோதி, தனக்கே உரிய பாணியில் மிக எளிய முறையில் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கதைகள், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. […]

Read more

மதுரையின் மாண்புகள்

  மதுரையின் மாண்புகள், முனைவர் சி.வடிவேலன், அய்யா நிலையம், விலை 125ரூ. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையை பாடாத புலவர்கள் இருப்பார்களா? அதுபோல் மதுரையின் பெருமையை பறைசாற்றும் பாடல்களை கண்டுபிடித்து எளிய விளக்கங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார் போன்ற பல பாடல்களை விளக்கி இருக்கிறார். விண்ணைத் தொடுமளவிற்கு வீடுகள், தென்றல் காற்று புகுவதற்கு சாளரங்கள், பல மொழிகளை பேசும் வணிகர்கள், பலவகை வாத்தியங்களின் ஒலி போன்று அவர் வர்ணிப்பது சங்ககாலத்தில் மதுரை நகரம் எப்படி […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று, ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் தம் மனத்திற்கு நியாயம் என்று எது படுகிறதோ? அதன்படியே வாழ்ந்து, தன் வரலாற்று நூலை தமிழர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் படைத்து உள்ளார். இதில் சமகாலத் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என எண்ணற்றோர் பெயர்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அபூர்வ தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றங்களின் இன்றைய நிலை பற்றி நூலாசிரியர் கூறிய கருத்துகள் சிந்திக்க தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027097.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் செல்போன், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற கருவிகள் வெயலிழந்து விடும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘ஹாம் ரேடியோ’ என்னும் ஒலி பரப்புக்கருவி, எத்தகைய இடரிலும் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்கது. இந்த கருவியின் சிறப்பம்சங்களை விளக்கி எழுதப்பட்டுள்ள நூல் இது. படித்து பயனுறு வேண்டிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல், இஸ்லாமிய நிறுவனம், விலை 275ரூ. காலை விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்லித்தருகிறது இஸ்லாம் மார்க்கம். அத்தகைய வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழீகளை பல்வேறு தலைப்புகளில் மவுலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ தொகுத்து தந்துள்ளார். இதை இ.எ.பஸ்லூர் ரஹ்மான் உமரீ அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 38 39 40 41 42 223