பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல்

பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பெண் விடுதலை, தமிழ் மொழி வளர்ச்சி, சுயமரியாதை, பொதுவுடைமை, கைம்பெண் கொடுமை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதி புரட்சிக் கவிஞர் எனப் புகழ் பெற்றவர் பாரதிதாசன். அவர் எழுதிய முதல் கவிதை தொடங்கி இறுதிக்கவிதை வரை அத்தனைக் கவிதைகளையும் எழுத்தாளர் கே. ஜீவபாரதி ஆய்வு செய்துள்ளார். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை கோடிட்டு காட்டியிருப்பது நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, ஸலாமத் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. சிறுவர், சிறுமியர்களுக்காக எழுதப்பட்ட நபிமார்கள் வரலாறு பாகம் 2ம் நூஹ் நபி, ஹுது, ஸாலிஹ் நபி ஆகியோரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அபுல் ஹசன் அலீ அந்நத்வீ எழுதிய இந்த நூலை மவுலவி ஷேக் முகம்மது மழாஹிரி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html பெண்மையின் வெளிப்பாடுகள் சங்கக் காலம் முதல் பக்தி இலக்கியக் காலம் வரை தமிழ் கவிதையில் இயங்கிய நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளும், உரைகளும் கொண்ட தொகுப்பு இது. அஞ்சியத்தின் மகள் நாகையார், ஆதிமந்தியார் தொடங்கி ஆண்டாள் வரை கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சாதாரண வாசகர்களும் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வகையில் […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இப்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டுரை எழுதுவதும் எளிது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கப்பலில் உலகம் சுற்றுவது எளிதல்ல. மகாத்மா காந்தியைப் பற்றி முழு நீள திரைப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்த ஏ.கே. செட்டியார் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த புத்தகத்தை எழுதினார். அக்காலத்தில் வெளிநாடுகள் எவ்வாறு இருந்தன, அயல்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை எல்லாம் சுவைபட எழுதியுள்ளார் […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை), டாக்டர் கே.வி. இராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 164, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-321-4.html சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் கே.வி.ராமன், தென் மாநிலங்களில், தான் பங்கேற்ற, பல முக்கிய அகழ்வாய்வுகள் பற்றி, இந்த நூலில் விவரித்துள்ளார். தென் மாநிலங்களில் நடந்த அகழாய்வு தொடர்பாக, தொல்லியல் துறை மூலம், அவ்வப்போது ஆசிரியர் வெளியிட்ட ஆங்கில ஆய்வறிக்கைகள், […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், டாக்டர் நா. மகாலிங்கம், ராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. தொழிலதிபர் நா. மகாலிங்கத்தின் 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். காஷ்மீ பிரச்னைக்கு ஒரு தீர்வு என்பது முதல், வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய என்ற கட்டுரையோடு 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது. மகாலிங்கம் அவ்வப்போது, ஓம் சக்தி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் […]

Read more

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, திருத்திய முதல் பதிப்பு மே 2014, தமிழாக்கம் எஸ். வி. ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 550ரூ. மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் […]

Read more

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ. உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, […]

Read more

காந்திஜியும் தமிழர்களும்

காந்திஜியும் தமிழர்களும், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 16, விலை 10ரூ. காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டப் பயணத்தில் தங்கள் உழைப்பையும், உயிரையும் கொடுத்த தமிழர்களின் தமிழ்ப் போராளிகளின் பங்கு அளப்பரியது. இதில் முகம் தெரியாத எண்ணற்ற தமிழர்களும் அடங்குவர். சத்தியாகிரகத்திற்காக தன் உயிரைத் தந்த முதல் பெண் என்ற பெருமை வள்ளியம்மை எனும் 16 வயது இளம் தமிழ்ப் பெண்ணுக்கே உரியது. இந்தியத் திருமணச் சட்டங்களை எதிர்த்துப் போரிட்டதில் ஈடுபட்ட 16 பெண்களில் 10 பேர் […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், தொகுப்பாசிரியர் என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், சென்னை, 2, பக். 368, விலை 350ரூ. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக இலக்கியத்தில் எழுந்த முதல் குரல் ஜெயகாந்தனுடையது. வணிகப் பத்திரிகைகளும் நல்ல படைப்பும் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். அவர் ஆனந்த விகடன் இதழில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய சிறுகதை, குறுநாவல், முழுநாவல் என கலந்து 17 கதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். வெளிவந்த காலத்தில் வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரளயம், […]

Read more
1 17 18 19 20 21 26