நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 308, விலை 260ரூ. நெல்சன் மண்டேலாவை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் என்றோ, ஒரு போராளி என்றோ ஒரு சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. நிற வெறியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் பெரும் போராட்டமே நடத்தி, அதில் வெற்றியும் கண்டு, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய ஒரு மாமனிதர், ஒரு தியாகி. மண்டேலா சிறையில் இருந்தபோது அவரால் […]

Read more

குழந்தைகளின் அற்புத உலகில்

குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ. குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி), ஆர். எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 136, விலை 100ரூ. உணவுப் பயிர்களின் சாகுபடியில் குறைந்த அளவு நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் 50 சதவிகித காடுகள் இருந்தபோது, மாதம் மும்மாரி மழை பொழிந்தது. ஆனால் தறேபாது பல்வேறு காரணங்களால் காடுகளின் மொத்தப் பரப்பளவு 10 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட மழை பெய்வதில்லை. […]

Read more

புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள், உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 750ரூ. 39 வயது வரையே வாழ்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார் இயற்றிய கவிதைகள் ஏராளம். தேசப்பற்று, ஆன்மிகம், சமூக மாற்றம், சாதிமறுப்பு, பெண்ணியம் என்று அவரது கவிதை வானத்தின் அளவு, விரிந்து பரந்தது. அவரது அத்தனை கவிதைகளையும் அழகாகத் தொகுத்து, அவற்றுக்கு முதல் முறையாக உரையும் வழங்கி இருக்கிறார், ஆசிரியர். வசன கவிதைகள் தவிர்த்து மற்ற எல்லா கவிதைகளும் உரையும், மேலும் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்புகளும் தந்து இருக்கிறார். […]

Read more

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 180, விலை 160ரூ. லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிய சர்ச்சையைத் தவிர்த்தும், தமிழர் நாகரிகம் ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர் உள்ளிட்டோருடன் எப்படியெல்லாம் தொடர்புடையதாக உள்ளது என்பதை, பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வழிபாடுகள் உள்ளிட்ட சான்றுகளுடன் நூலாசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். திராவிடர்கள் வெளியிலிரந்து வந்தவர்களா? தமிழகத்தின் பூர்வீகக் குடிகளா? என்ற வாதத்தை மையமாக்கி, அறிஞர்களின் அனுமானங்களை வைத்து திராவிடர் தமிழக பூர்வகுடிகளே எனக் கூறும் நூலாசிரியர், அதை […]

Read more

நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி.ஐசக் அருள்தாஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 174, விலை 130ரூ. தமிழகத்துக்கு கன்னியாகுமரி என்றொரு மாவட்டம் கிடைக்கவும், கேரள மாநிலத்திலிருந்து அம்மாவட்டப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கவும் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமான பெயர் நேசமணி, அவரது இளைப்பாறல் இல்லாத போராட்டத்தின் மூலம்தான் தமிழகத்தின் தெற்கு எல்லை நெல்லை என்ற வரையறையில் இருந்தது, கன்னியாகுமரிவரை நீண்டது. தனது வாழ்வை, தனக்கு மட்டுமே பயனுள்ளது என்ற அளவில் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல், தான் பிறந்த […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-5.html பெண்ணுரிமை, சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் வாள்களைச் சுழற்றிக் கொண்டு வரும் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணை மனித உயிராக மதிக்காமல், அவள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்டவள் என்ற ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து, கறுப்பு நிறம் என்றால் தாழ்ந்தது என்ற மனப்பான்மையை எதிர்த்து, உழைக்கும் பெண்களின் அவலநிலையைக் குறித்து, பெண் படைப்பாளர்கள் அவமானப்படுவதை எதிர்த்து […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், […]

Read more
1 15 16 17 18 19 26