மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு, பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 800ரூ. ஆசிரியர் பழ. நெடுமாறனின் கடும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த புத்தகம் உருவாகி இருப்பதை நன்றாக உணரமுடிகிறது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஆதிகாலத்தில் இருந்து வரும் நட்பும் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பண்பாட்டு பரிமாற்றமும் மிக நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ரஷியா செய்த உதவிகள், ரஷியாவில் நடைபெற்ற புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த […]

Read more

துளு நாட்டு வரலாறு

துளு நாட்டு வரலாறு, மயிலை சீனி. வேங்கடசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 108, விலை 75ரூ. பண்டைய தமிழக வரலாற்றைப் போலவே துளு நாட்டு வரலாறும் சங்க இலக்கியங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தென் கன்னடத்தை துளு நாடாகக் காட்ட நூலாசிரியர் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியப் பாடல்களின் சான்றுகள் இப்போதும் மிகவும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. துளு நாட்டின் பெயரை மாமூலனார் தனது பாடலில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதைப் பல பாடல்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார். […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ. மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், தொகுப்பாளர்கள் இரா. சினிவாசன், பா. மதுகேசுவரன், அ. சதீஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 576, விலை 560ரூ. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் வீ. அரசவின் பணி நிறைவையொட்டி, அவரிடம் பயின்ற மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ‘ஓர்மை’ என்பதை ஆங்கிலத்தில் (Consciousness) என்று தமிழில் மொழியாக்கம் செய்யலாம். ‘ஒர்மை வெளி’ என்பதை A Space for consciousness என்று மொழியாக்கம் […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more

யாருடைய எலிகள் நாம்?

யாருடைய எலிகள் நாம்?, துளி வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். பத்திரிகைகளில் எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவையாகவோ, தேவையற்றவையாகவோ ஆகிவிடுவதில்லை என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. தமிழக அரசியல், ஈழப்பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி, நூலாசிரியர் சமஸ் எழுதியுள்ள சூழலியல் கட்டுரைகள் ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது. […]

Read more

இளைப்பாறும் சுமைகள்

இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 360ரூ. பழங்கால இலக்கிய வகையில் காப்பியம் தனிச் சிறப்பு பெற்றது. இவை அக்கால மக்களின் நாகரிக, பண்பாட்டுக் கருவூலமாக இன்றும் கருதப்பட்டு வருகின்றன. கற்பனை வளமும், இலக்கிய நயமும், சுவை உணர்வும், சிந்தனைத் திறனும் கொண்ட உன்னதப் படைப்பே காப்பியங்களாகும். இத்தகைய சிறப்பு மிகுந்த உலகக் காப்பியங்களை இந்த நூலில் எழுத்தாளர் இரா. காசிராசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூலில் முதல் மூன்று தலைப்புகளில் காப்பியத்தின் தன்மை, தோற்றம், வளர்ச்சி, வகை முதலானவை […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more
1 14 15 16 17 18 26