மேடம் பவாரி

மேடம் பவாரி (பிரெஞ்சு நாவல்), குஸ்தாவ் ப்ளாபர், தமிழில் கோ. பரமேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.114, விலை 90ரூ. பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியத்திற்கு பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில், மேடம் பவாரி இடம்பெறும். கதாநாயகி எம்மா, கள்ளக் காதலிலும், ஆடம்பர வாழ்க்கையிலும் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால், தன் மனைவி நெறி தவறியவள் என்று தெரிந்து கொண்ட பிறகும், எம்மாவின் கணவர், அவளை மனதார நேசிக்கிறார். அவள் இறந்த பிறகும், அவள் […]

Read more

தமிழர் வாழ்க்கையில் பூக்கள்

தமிழர் வாழ்க்கையில் பூக்கள், ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 164, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024479.html பத்திரிகைகளில் வெளியான, 15 கட்டுரைகளின் தொகுப்பு. பூவுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்பு, எதற்கெடுத்தாலும் மருந்து சாப்பிடும் மனப்பான்மை, புத்தகங்களின் பயன்பாடு, நூலகம் என, பல தலைப்புளும் சிந்தனையை தூண்டும் செய்திகளை உள்ளடக்கி இருக்கின்றன. கொசுவுக்குப் பயந்து மனிதன் படும் துன்பத்தையும், சிற்றுயிர்களிடம் மனிதன் கொண்டிருந்த இரக்கத்தையும், உயிரியல் பூங்காக்களில் பார்க்க வேண்டியிருக்கும் […]

Read more

பட்டுத்தெறித்த பார்வைகள்

பட்டுத்தெறித்த பார்வைகள், பேராசிரியர் தி. இராசகோபாலன், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. ஆங்கிலத்திலும், தமிழிலும், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் ஒருங்கே வல்லவரான பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதியுள்ள பட்டுத்தெறித்த பார்வைகள் என்ற நூலில் உள்ள கருத்துகள், நடைகள் எல்லாமே பொறிகளாகத்தான் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக சாயம் போன சேலையை பார்த்திருப்பீர்கள். சாயம் போன சொக்காயைப் பார்த்திருப்பீர்கள். சாயம் போன ஒரு நாட்டை பார்த்திருக்கிறீர்களா? எந்த நாடு அந்த நாடு? எந்த நாடு விவசாயத்தை புறக்கணித்து, விவசாயிகளை தற்கொலைக்கு ஆளாக்குகின்றதோ, அந்த நாடு சாயம் போன நாடு. […]

Read more

குடகு

குடகு, ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், பக். 160, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000014925.html குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகுதான் எனும் அழகு தமிழில் துவங்கி, அந்த நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை (பக். 159) எனும் அதிசயத்தோடு முடியும் இந்த நூலில் 1959ல், சென்னையில் இருந்து பெங்களூர், மைசூர் வழியாக, குடகு சென்று அங்கு தலைக்காவேரி அடைந்து, அதன் புனிதத்தையும், சிறப்பையும் விளக்கி, குடகர்களின் மரபு, சடங்கு இவற்றை […]

Read more

பேர் சொல்லும் நெல்லைச் சீமை

பேர் சொல்லும் நெல்லைச் சீமை, அப்பணசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023979.html தாமிரபரணி நதிக்கரையை தீரா தேசம் என்று சொல்வது சொல்வழக்கு. அந்த தீரா தேசத்தைப் பற்றி எழுத்தாளர் அப்பணசாமி தனது அழகு தமிழில் தொகுத்து எழுதியிருக்கும் நூல் இது. நெல்லைச் சீமை, தமிழ் மக்களின் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கியது. அதாவது மலைகளில் வாழ்ந்த மனிதன் வனங்களில் இறங்கி சமவெளிகளில் நிலை பெற்றது வரையான நாகரிக […]

Read more

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள்

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 340, விலை 260ரூ. அனுபவங்களின் வழியே ஒரு பயணம் பயண அனுபவங்களைப் பதிவு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் தொடங்கிவிட்டது. வெளியுலகம் தொடர்பான செய்திகளைத் தனி மனிதர்களின் பயணங்கள்தான் உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்த்தன. தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பயணக் கட்டுரைகளும் எழுதப்பட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 1960கள் வரை எழுதப்பட்ட பயணக் கட்டுரைகளின் […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே. செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை விளக்குகிறது முதல் கட்டுரை. பீனிக்ஸ் பூங்கா அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் […]

Read more

வீணாதி வீணன்

வீணாதி வீணன், நா. வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நா. வானமாமலை எழுதி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வீணாதி வீணன் கதை நூலை படித்தேன். கதைப் பாடல் நூல் இது. தென்பாண்டி சீமையை ஆண்ட, ஐவர் ராசாக்களில் ஒருவரான, குலசேகரனின் கதையின், கிளைக் கதை. வள்ளியூரிலிருந்து, மதுரைக்கு இடம்பெயர்கிறார் குலசேகரன். அப்போது உறவுகளால் ஏமாற்றப்பட்டு உணவுக்கு வழியில்லாத ஒருவன் வள்ளியூர் வருகிறான். பசிக்கு பிச்சை எடுக்கிறான். உணவு கிடைக்கவில்லை. தொழில் செய்ய, விறகு வெட்டுகிறான். அரசின் வரிவிதிப்பு, தொழிலை […]

Read more

சமுதாய வரலாற்றுச் சுருக்கம்

சமுதாய வரலாற்றுச் சுருக்கம், தி.கே. மித்ரோபோல்ஸ்கி, தமிழில் கார்த்தி, ப. விருத்தகிரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 518, விலை 350ரூ. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற மரபீனீ அறிவியலில் தொடங்கி, மனதின் எவ்வாறு குழுக்களாகச் செயல்பட்டான், எவ்வாறு மனிதனை மனிதன் அடிமையாக்கினான், உழைப்புச் சுரண்டல், நிலப்பிரபுத்துவமுறை, தொழில்புரட்சி, முதலாளித்துவம் என பன்முகத் தன்மை கொண்ட சமூக வளர்ச்சியை கால வரிசைப்படி விளக்கிச் செல்கிறது இந்நூல். இது முழுக்க முழுக்க பொதுவுடைமைவாதியின் பார்வையில் முன் வைக்கப்படும் வரலாறு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. […]

Read more
1 12 13 14 15 16 26