நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- கசடறக் கற்க […]

Read more

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், மீண்டும் பாடம் கேட்கிறேன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந. முத்துமோகனின் நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 196, விலை 160ரூ. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனை ஓர் ஆய்வாளர் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர் – தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும், புலமையும் உடையவர் – மனித உரிமை சார்ந்த பல்வேறு இயக்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் ஆகியவற்றில் தொடர்புடையவர் என்று மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மனித வாழ்வு சார்ந்த […]

Read more

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல்

கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல், டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர். உடலில் பச்சை குத்துதல், உலகெங்கும் காணப்படும் மிக பழமையான கலை. இது நாட்டுப்புற மக்களிடம் இன்றும் செல்வாக்கு பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற பாடல்களில் காணப்படாத இந்த கலை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளில் காணப்படுகிறது. அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தக் கலை, இப்போது இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியிலும் […]

Read more

திராவிட இயக்கமும் கலைத்துறையும்

திராவிட இயக்கமும் கலைத்துறையும், டாக்டர் மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 74, விலை 70ரூ. நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள் வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ. மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் […]

Read more

கரிசக் காடு

கரிசக் காடு, எஸ்.எஸ். போத்தையா, தொகுப்பும் பதிப்பும்- பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 188, விலை 140ரூ. கரிசல் மண்ணின் நாட்டுப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொலவடைகள், நம்பிக்கைகள், யுக்திக் கணக்குகள் எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுப்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் எஸ்.எஸ். போத்தையா. ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைத்தபோது, தனது நாட்டுப்புற இயல் சேகரிப்புப் பணிக்கு இடமாற்றம் தடையாக இருக்கும் என்பதால், பதவி உயர்வை வேண்டாம் […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் மட்டுமே வரலாற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இளைய சமுதாயத்தினரின் இதயங்களை அறிவியலைக்கொண்டு ஆழ உழுதால் மட்டுமே அவர்கள் ஆற்றல் மிக்க, கற்பனைத்திறன் மிக்க விளைநிலங்களாக மாறும் என்பதால் அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக 12 விஞ்ஞானிகளை நூலாசிரியர் தேவிகாபுரம் சிவா தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.   —- மருத்துவ நாடி ரகசியங்கள், கோகிலா […]

Read more

நிழலற்ற பயணம்

நிழலற்ற பயணம், தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை, பி.ஆர்.சுபாஷ்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், பக். 476, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-000-7.html மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவருமான, சுஷில்குமார் ஷிண்டேயின், வாழ்க்கை வரலாற்று நூல். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறப்பு, 5ம் வகுப்பு வரை கல்வி, தந்தை மறைவால் படிப்புக்கு முற்றுப்புள்ளி, தாய்க்கு உதவ, வீட்டு வேலையாளாக சேர்தல், இடையே இரவுப் பள்ளியில் […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை, எடையூர் சிவமதி, வின்வின் புக்ஸ், சென்னை, விலை 50ரூ. புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையில், எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தளிக்கலாம். வாழக்கைக்கு வழிகாட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். அத்தகைய சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் எடையூர் சிவமதி. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், காமராஜர், பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன் உள்பட பலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம். சிந்திக்கலாம். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- […]

Read more
1 18 19 20 21 22 26