உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. 1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை. இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது […]

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more

திருக்குறளில் உயிர்ச்சூழல்

திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.336, விலை 300ரூ. தினமணியில் 2000-2001இல் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக மலர்ந்திருக்கிறது. இன்று மக்களுடைய மனதை ஆட்டிப் படைக்கும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. சின்னத் திரைக்காக ஒரு காட்சியைப் படம் பிடிப்பது என்பது அவவ்ளவு எளிதானதல்ல என்பதை இந்நூலைப் படிக்கும் யாரும் உணர முடியும். ஷாட்-இல் எத்தனை வகைகள் உள்ளன? எடுக்கப்போகிற காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் எப்படி மாறுபடுகிறது? ஒருவரை உயர்வாகக் காட்ட […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள், மீனாட்சி புத்தக நிலையம். சிறுகதையில் சாதித்தவர் ஜெயகாந்தன் மறைந்த எழுத்து சிற்பி ஜெயகாந்தனின் சிறுகதைகள் பலவற்றை திரும்பத் திரும்ப படிக்கிறேன். அவற்றில் சிலவற்றை சமீபத்தில் படித்தேன். மீனாட்சி புத்தக நிலையம் அந்த நூல்களை வெளியிட்டுள்ளது. பெண் விடுதலைக்காக, கவிதைகள் மூலம் போராடினார் பாரதி; சிறுகதைகள் மூலம் சாதித்தார் ஜெயகாந்தன். அவரது எழுத்து நடை, காட்சிப்படுத்தும் முறை, சம்பவங்களை சினிமா பார்ப்பது போல காட்டும். சிறுகதையின் ஒவ்வொரு நிகழ்வும் கதையின் பாத்திரங்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளும், மனதில் ஆணி அடித்ததுபோல பதிந்துவிடும். சிறுகதைகள் […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more
1 2 3