தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 600002, விலை ரூ. 85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-6.html இந்த தேசத்தில் மிக மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அதில் செத்துப்போனவர்களில் பலர் தகவல் உரிமைப் போராளிகளாக இருக்கிறார்கள். வாழ்க்கைத் தரத்தில் வறுமைக் கோட்டைத் தொடும் நிலையில் இருக்கும் இவர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் பெரிய முதலைகளுக்கு, அரசியல் தாதாக்களுக்கு ஏன் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாமலேயே […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள், வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதி செய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் சேர்த்து மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனை பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 108, விலை 150 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-4.html சோழர்கள் ஆட்சி நடத்திய காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகும். தென்னிந்தியா முழுவதையும் சுமார் 300 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டனர். நாட்டில் அமைதி நிலவியது. கம்பர், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் சிறந்த நூல்களை எழுதி, தமிழை வளர்த்தனர். கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்த, சோழர் வரலாற்றை சிறப்புடன் எழுதியுள்ளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார். அவர் […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 256, விலை 130 ரூ. பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியரான கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும், விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை ‘காடு வெளையட்டும் பெண்ணே! நமக்குக் காலமிருக்குது […]

Read more

மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ. மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், […]

Read more

எனக்குள் ஒரு கனவு

எனக்குள் ஒரு கனவு, ராஷ்மி பன்சால், தமிழில் ரவி பிரகாஷ், விகடன் பிரசுரம், பக்கம் 470, விலை 175 ரூ. சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டுவிட்டதால், அவனைத் தூய்மைப்படுத்த, அவன் பாட்டி அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை. அவன் வளர்ந்து பெரியவனாகியபோது மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா? என மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து ‘சுலப்’ என்ற ஓர் இயக்கத்தைத் துவங்கி நடத்திவருகிறார் பிந்தேஷ்வர் பதக். இவர் முயற்சி கழிப்பறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஒரு மையம் […]

Read more

திருமாலை

தேவை தலைவர்கள், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 199, விலை 85 ரூ. இமாலய சவால்களை எதிர்கொள்ள விரும்பும், துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கான நவீன அர்த்த சாஸ்திரம் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ள நூலில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. புத்தகத்தின் பாதிக்கு மேல் கேள்வி – பதில் பாணியில், சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில அரசியல் கட்சிகளின் போக்கு, செயல்பாடு பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.   —   திருமாலை, தி. பாஷ்ய ராமானுசதாசன், விக்னேஷ் வெளியீடு, சென்னை – […]

Read more

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில்

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை – 17, விலை 100 ரூ. கல்வித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் நெல்லை கவிநேசன். ஐஏஎஸ் கனவுடன் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. பாடத்திட்டம், கேள்விகள் கேட்கப்படும்விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரி வினாத்தாட்களும் இடம்பெற்றுள்ளன.   —   108 காதல் கவிதைகள், ஆத்மார்த்தி, வதனம், 67 டிடி சாலை, ஆரப்பாளையம், மதுரை – 16, விலை 40 ரூ. […]

Read more

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more
1 28 29 30 31