மீஸான் கற்களின் காவல்

மீஸான் கற்களின் காவல், பீ.கே. பாறக்கடவு, தமிழில்-தோப்பில் முஹம்மதுமீரான், அடையாளம், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, பக். 60, விலை 50ரூ. கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே. பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, […]

Read more

பெண்எழுத்து

பெண்எழுத்து, இரெ. மிதிலா, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 224, விலை 150ரூ. எழுத்துலகில் பெண்கள் எப்படி நுழைந்தனர்? அவர்கள் எழுத்துலகில் நுழைந்த காலகட்டத்தின் சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்பன போன்ற பல்வேறு நுட்பமான தகவல்கள் நிறைந்துள்ள நூல். பெண் எழுத்தாளர்கள் குறித்த ஆய்வாக இருந்தாலும், சமூகத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்களது முக்கியத்துவம் எனப் பல தகவல்களையும் நூல் உள்ளடக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிட்ட மதத்தினர் வந்த பிறகே பெண்கள் அதிகம் எழுதத் தொடங்கினர் என்பது போன்ற சில கருத்துகள் […]

Read more

அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல்

அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், 621310, திருச்சி மாவட்டம், விலை 210ரூ. அரபுப் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சி. அரை நூற்றாண்டு காலமாக அசைக்க முடியாத மன்னர்களாக இரந்தவர்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இணையதளம், இமெயில் மூலமாக அசைத்துப் பார்த்தது அரபுப் புரட்சி. லிபியாவில் கடாபியும், எகிப்தில் முபாரக்கும், துனீசியாவில் பென் அலியும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகக்காரணமான இளைஞர்களும் இளம் பெண்களும் எப்படித் திரண்டனர், ஏன் திரண்டனர், அவர்களை இயக்கிய […]

Read more

மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும்

மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும், முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம், சென்னை 108, பக்கங்கள் 1656, விலை 1000ரு சங்கத்தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வுக்கட்டுரை, கதை, கவிதை, கடிதங்கள், நாடகம், படைப்பிலக்கியம் என டாக்டர் மு. வரதராசனாரின் பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு பத்திரிக்கைகளுக்குப் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளில் தொகுக்கப்படாமலேயே இருந்த 242 கட்டுரைகளையும் முதன் முதலாக இரண்டு தொகுதிகளாகத் தொகுத்து பதிப்பித்துள்ளார் மு.வ.வின் கடைநிலை மாணவர் ச.க. இளங்கோ. மொழித்திறம், சங்க இலக்கியம், திருக்குறள், […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை […]

Read more
1 2 3