ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 360, விலை 200ரூ. ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர். வைஷ்ணவம் என்பதன் விளக்கம், வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள், இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தின்பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ. புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more

சோசலிச சமுதாய மேதைகள்

சோசலிச சமுதாய மேதைகள், அ,சா. குருசாமி, சுரா பதிப்பகம், 1620 ஜே பிளாக், அண்ணா நகர், சென்னை 40, விலை 90ரூ. சோசலிச தத்துவார்த்த மரபில் குறிப்பிடத்தக்க, மூவரான ஸன் யாட் சென், காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல். இது தத்துவார்த்த நூல் இல்லை என்றாலும் தத்துவ அறிஞர்களின் வாழ்க்கை எளிய நடையில் விவரிக்கும் நூல் இது. நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.   —-   குறுந்தொகை, இலந்தையடிகள் வித்துவான் இராச. சிவ. சாம்பசிவவர்மா(1934-37), பதிப்பும் ஆய்வும்- இரா. […]

Read more

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில்

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை – 17, விலை 100 ரூ. கல்வித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் நெல்லை கவிநேசன். ஐஏஎஸ் கனவுடன் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. பாடத்திட்டம், கேள்விகள் கேட்கப்படும்விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரி வினாத்தாட்களும் இடம்பெற்றுள்ளன.   —   108 காதல் கவிதைகள், ஆத்மார்த்தி, வதனம், 67 டிடி சாலை, ஆரப்பாளையம், மதுரை – 16, விலை 40 ரூ. […]

Read more
1 2