தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள்

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள், தொகுப்பாசிரியர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ. புகழ்பெற்ற கவிஞர்களின் திரையிசைப் பாடல்களை ஆண்டு வரிசைப்படி தொடர்ந்து தொகுத்துவரும் தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து இம்முறை தொகுத்தளித்திருக்கும் நூல் கவி கா. மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள். கவி. கா. மு. ஷெரீப் 1949 முதல் 1963 வரை 14 ஆண்டுகளில் 30 படங்களில் 90 பாடல்கள் எழுதியுள்ளார். கா. மு. ஷெரீப்பின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பணம் பந்தியிலே குணம் […]

Read more

படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும், உதயை மு. வீரையன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 125ரூ. வாசிப்பின் மீது வாஞ்சை கால ஓட்டத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது வாசகருக்கு மட்டுமல்ல, படைப்பாளருக்கும் அவசியமான ஒன்றே. வாசிப்பென்பது அனைவருக்கும் பொதுவென்றாலும், புத்தக வாசிப்பின் வழியே ஒரு வாசகர் அடைந்த அனுபவம் அவருக்குள்ளேயே தங்கிவிடுகிறது. ஒ ரு படைப்பாளியோ தனக்குள் அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசகருக்கே அனுபவக் கடத்தியாய்த் திருப்பியனுப்பும் வேலையைச் செய்துவிடுகிறார். அப்படியான எழுத்துக்களின் பதிவே உதயை மு. வீரையனின் ‘படித்ததும் […]

Read more

மானுடப்பண்ணை

மானுடப்பண்ணை, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. வேலை இல்லாத, கிடைக்காத, கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வரப்பெறாத இளைஞர்கள், இந்தத் தேசத்தில், தெரு நாய்களைப் போல வாழச் சபிக்கப்பட்டவர்கள். இந்த துருப்பிடிக்கும் இளமையாளர்கள் பற்றிய சரியான சமூகக் கவலையே இந்த நாவல். கதாநாயகனை பெரியாரியத்தின் பக்கம் இழுக்கும் பாலகிருஷ்ணன். காதல் பக்கம் தள்ளும் நீலா, மார்க்சியத்தில் பக்கம் வசீகரிக்கும் தோழர், மண்ணின் மைந்தர் தண்டபாணி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்கள். வேலையில்லாத இளைஞன் மன உளைச்சல், குடும்ப உறவு, காதல், வேலை வாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு […]

Read more

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி, ச. அய்யாதுரை, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 104, விலை 80ரூ. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும். விபத்துகளாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ, பகையாலோ, தற்கொலையாலோ, மனிதன் மரணமடையக்வடாது. மரணத்தை ஏற்படுத்தும் மனிதன் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல். நீர், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், பிற உயிரினங்களால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள், பிற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள், மனிதன் தனக்குத் தானே […]

Read more

சந்தன உவரியல் சாலமன் கப்பல்

சந்தன உவரியில் சாலமன் கப்பல், மோகன ரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 166, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-286-0.html திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் உவரி. இங்குதான், உலகப் புகழ் பெற்ற ஒபீர் துறைமுகம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் பின்பு தூர்ந்து மறைந்தது என்றும் சாலமன் மன்னன் வாழ்ந்த காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக ஒபீர் துறைமுகத்திலிருந்து சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் ஒபீர் […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more

சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1919இல் பிறந்தவர் எச். வேங்கடராமன். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர ஆதீன நிலையத்தில் தினமும் மாலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை இலவசமாகக் கற்பித்து வந்தார். மேலும் […]

Read more

தமிழன் குரல்

தமிழன் குரல், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 60ரூ. தமிழர்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் ம.பொ.சிவஞானம் அக்கறையுடன் எழுதியிருக்கும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர்களின் சமயக் கொள்கை, தேசியக் கொள்கை, தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசுவோரின் பழக்க வழக்கங்கள், சித்தூர் ஜில்லாவின் வரலாறு, சித்தூர் முதல் திருப்பதி வரை பெரும்பாலோர் தெலுங்கு பேசுவோராயிருப்பதற்கான காரணம், முத்தமிழ் வளர்த்த கோயில்கள் மூடத்தனத்தை வளர்க்கும் கூடங்களாக மாறிப்போனது. தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தாத தமிழ் நாடகங்கள் இப்படி எல்லாத் துறைகளையும் பற்றி தெளிவாகவும் […]

Read more
1 6 7 8 9 10 13