பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 170ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024596.html இன்றும்கூட ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் பெண்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதை நூலாசிரியர் இந்நூலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் பெண்கள், அதற்கான வாய்ப்புகளைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆனால் பெண் என்பதால் அவர்கள் எத்தகைய துன்பங்களை […]

Read more

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், பக். 120, விலை 192ரூ. நலம் 360 என்ற தலைப்பில் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்ததோடு, தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் 24 தலைப்புகளில் மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு உபாதை குறித்த விவரங்களும், அவற்றின் தன்மைகளும், தவிர்க்க வேண்டிய வழிமுறைகளும், அவற்றை தீர்ப்பதற்கான உணவு முறைகளுமாக, அனைத்து விவரங்களையும் அலசிச் செல்கிறார். பண்டைய கால உணவு முறைகளில், நலவாழ்வு எப்படி மக்களிடம் நெடுங்காலம் […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ. இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம், மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான், விகடன் பிரசுரம், விலை 350ரூ. இந்தியாவும் விடுதலையும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு என்று எழுதிக் குவித்த திரு.வி.க.வுக்கு முதுமையில் பார்வை லேசாக மங்க ஆரம்பித்தது. அதற்காக, எழுதிய கை சும்மா இருக்குமா? பார்வை குறைந்த பிறகுதான் இருளில் ஒளி படைத்தார். படைப்பாளிக்கு சிந்தனைதான் பார்வையே தவிர, கண் அல்ல. இதோ இரண்டு படைப்பாளிகள். ஒருவர் இருளில் அனுபவித்த வாழ்க்கையை வெளிச்சம் பெற்றதும் நாவல் ஆக்கி இருக்கிறார். […]

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்ப்பொருள் காண்பது அறிவு (ஸ்ரீசாலை ஆண்டவர்களின் வாக்கும் வரலாறும்), கே. நிறைமதி அழகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 85ரூ. அனந்தர்களின் அற்புத குருநாதர் மெய்வழிச்சாலை என்பது, எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. கடந்த, 1922ம் ஆண்டு, காதர் பாட்சா என்பவர் ஆரம்பித்து வைத்த மார்க்கம் இது. இதை ஸ்தாபித்தவரை, சாலை ஆண்டவர் என, மெய்வழி அன்பர்கள் அழைக்கின்றனர். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர், பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 165ரூ. தமிழ்நிலத்தில் வேளாண் சிந்தனையை விதைத்தவர். தனது எண்ணங்களை வியாபாரப் பொருளாக மாற்றாதவர். பேச்சு வேறு, செயல் வேறு என வாழாதவர். மண்ணுக்குள் புதையும் வரை சொன்ன சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், பசுமைப் போராளி நம்மாழ்வார். சிலர் பேசுவார்கள். செயல்பட மாட்டார்கள். சிலர் செயல்படவும் செய்வார்கள். தான் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மாழ்வார் சிந்தித்தார், செயல்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஏராளமானவர்களையும் செயல்பட வைத்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பச்சைத்துண்டு பசுமைப் […]

Read more
1 7 8 9 10 11 31