எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், விகடன் பிரசுரம், பக். 616, விலை 240ரூ. இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப்போனார். பூட்ஸ் அணிந்த […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணர்வுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும் மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தப்பரிப்பு மையங்களின் பெருக்கம், மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இது மாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மறந்ததுதான். சுத்தம் என்ற நல்ல […]

Read more

தென்றல் வீசிய திரை வானம்

தென்றல் வீசிய திரை வானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2 புத்தகங்கள் விலை ஒவ்வொன்றும் ரூ. 500. தமிழ்த்திரைபட வரலாற்றை 2 புத்தகங்களில் விவரிக்கும் நூல். இதன் ஆசிரியர் டி. ஸ்ரீனிவாஸ், நிறைய விஷயங்களைக் கூறுகிறார். இடையிடையே, இந்திப்பட வரலாறு, தெலுங்குப்பட வரலாறு ஆகியவற்றையும் புகுத்தி உள்ளார். படங்கள் மிகச்சிறியவையாக உள்ளன. சற்று பெரிதாக்கி இருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —-   கற்க கசடற விற்க அதற்குத்தக, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கல்வி இப்போது வணிகமாகிவிட்டது. அதுவும் அதிக வருமானம் […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

தொடக்கம் தெரியுமா

தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, பக். 232, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-7.html பல நிகழ்வுகளின் தொடக்கம் அருமையாகவும், ஆச்சரியமாகவும் கூட இருக்கும். நூலாசிரியர் 59 முக்கிய நிகழ்வுகளை எடுத்து அவற்றின் தொடக்கம் ஏன், எப்படி, எதற்கு என்ற விவரங்களோடு பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மெரீனாவின் முதல் சிலை, உழைப்பாளர் சிலை. அந்த சிலை வர காரணகர்த்தா சிங்காரவேலர், உருவாக்கிய சிற்பி ராய் சவுத்ரி என்ற விவரங்கள் (பக். 231-232), சினிமா ஸ்டுடியோவில் லேப் […]

Read more

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 95ரூ. பிரபல எழுத்தாளர்களின், சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, அசாகமித்திரன், சூடாமணி ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன் தொகுதியில், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பொன்னகரம், சிற்பியின் நகரம், நாசகாரக்கும்பல், நினைவுப்பாதை, காஞ்சனை உள்பட 20 சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொகுதிகளின் விலை தலா ரூ.130. மற்ற தொகுதிகள் ஒவ்வொன்றின் விலை 95ரூ. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைப் […]

Read more

சிறுகதைச் சிகரங்கள் 7

சிறுகதைச் சிகரங்கள் 7, பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, சூடாமணி, புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன், அசோகமித்திரம், விகடன் பிரசுரம், சென்னை, விலை ரூ750 (7 புத்தகங்களும் சேர்த்து). என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்போது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது – புதுமைப்பித்தன். இப்படி ஒருமுறை சொன்னார். நூற்றாண்டுகள் கடந்த தமிழ்ச் சிறுகதைகளில் எது நல்ல கதை, எவர் மட்டும் சிறந்த கதாசிரியர் என்று எப்படித் தேர்ந்தெடுக்க முடியும், கடலிலும் முதலில் ஒரு […]

Read more

மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, விலை 270ரூ. பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலமாக இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து அவர்களை வெற்றிப்படி நோக்கி அழைத்து செல்பவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு. விரக்தியின் விளிம்புக்குச் செல்லும் மனிதன், அழிவில் இருந்து மீள நெஞ்சக்கு ஆறுதல் களிபம்பு தடவுகிறார். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; எனவே முடியாது என்ற வார்த்தைக்கு முடிவு கட்டுங்கள் என்பதை முடிவாகச் சொல்கிறார். வாழ்க்கையை வசப்படுத்தவும், வாசப்படுத்தவுமான […]

Read more
1 8 9 10 11 12 31