மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், பக். 288, விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024069.html எவ்வித பிரச்னையையும் தீர்க்க, புதிய கோணத்தில் சிந்தியுங்கள் என, அறிவுறுத்தும் புத்தகம். அதை, அறிவுரையாக கூறி தெவிட்டாமல், நண்பனாக வாசகனோடு, நூலாசிரியர் பேசுகிறார். புராணங்கள், கணிதம், நாட்டுப்புற கதைகள், மேல்நாட்டு கதைகளில் உள்ள புதிர்கள் மூலம், நம்மை கட்டுரைக்குள் இழுக்கும் லாவகம், ஆசிரியருக்கே உரியது. மொத்தம் 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. குழு ஒற்றுமையை விளக்கும் ஆசிரியர், […]

Read more

விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ. விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.   To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், அ. முத்துலிங்கம், விகடன் பிரசுரம், பக். 270, விலை 155ரூ. கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் அவநம்பிக்கை மனிதர்களில் எத்தனை வகைப்பாடு உண்டோ பயணங்களிலும் அப்படியே. அதிலும் சில முத்திரைப் பயணங்கள், முன்னுரிமை பெறுகின்றன. செங்கடலைக் கடந்த மோசஸின் பயணம், பழைய ஏற்பாட்டில் படிக்கக் கிடைக்கிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு யாத்ரீகராக வந்த பாஹியான் பற்றிய விவரங்களும் பரவலாக அறியப்பட்டுள்ளன. ஐரோப்பிய மாலுமி கொலம்பஸ், இந்தியாவுக்குப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுஅமெரிக்காவோடு நின்றுவிட்டார். இப்படி எத்தனையோ பயணங்கள். வீரமான பயணங்கள், காளிதாசனின் எழுத்தில் சிருங்காரமான […]

Read more

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை, ராஜம் முரளி, எழுத்தாக்கம் பிரேமா நாராயணன், விகடன் பிரசுரம், பக். 168, விலை 110ரூ. அழகைப் பராமரிப்பது என்றதுமே நமக்கு உடனே இந்த ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இந்த சோப்பை உபயோகியுங்கள் என்பன போன்ற விளம்பரங்கள்தாம் நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, தலை முதல் பாதங்கள் வரை அழகுபடுத்த இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் அழகு சாதனப் பொள்கள் எல்லாமே நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண, இயற்கைப் பொருள்கள்தாம். அந்த இயற்கை அழகு சாதனப் பொருள்களைத் […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், விலை 165ரூ. பூச்சிக்கொல்லி விஷம், ரசாயன உரம் என்று 50 ஆண்டுகளாக இருந்த நவீன விவசாயத்தை இயற்கை வேளாண்மை நோக்கி திருப்புவதற்கான சிந்தனையை விதைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல். தன் வாழ்நாள் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்களுக்கு எதிராக பிரசாரம் செய்த அவர், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய அளவில் இயற்கை வேளாண்மை வேகம் பெற்றதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், […]

Read more

வலி தீர வழிகள்

வலி தீர வழிகள், டாக்டர் எம். செந்தில்குமார், விகடன் பிரசுரம், பக். 192, விலை 120ரூ. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், நுண்ணிய நரம்புகள் மூலம், அந்த செய்தி மூளைக்கு உணர்த்தப்பட்டு, அந்த பகுதியில் வலி உணரப்படுகிறது. எந்த ஒரு நோய்க்கும் உடல் தரும் எச்சரிக்கை மணி, வலிதான். இந்த நூலானது பாதம் முதல் தலைவரை ஏற்படக்கூடிய வலிகளைச் சொல்லி, வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை விளக்கி, வலி வருவதன் காரணங்களையும், வலி ஏற்படாமல் இருக்க நாம் […]

Read more
1 6 7 8 9 10 31