ராஜாஜி எழுதிய மதுவிலக்கு

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, பக். 136, விலை 110ரூ. ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும் ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில், இந்நூலைக் கம்பன் அன்பர்களுக்கு அளித்துள்ளனர். அவர்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். இந்நூலாசிரியர் மு. ராமசந்திரன், நயத்தக்க நாகரிகத்துடன் தகுந்த சொல்லாட்சிகளுடன் நறுக்குத் தெரித்ததுபோல, நகைச்சுவை கலந்து, நூலை எழுதியிருப்பது, பேச்சில்மட்டுமல்ல எழுத்திலும் அப்படியே என்று நிலை நிறுத்துகிறார். இந்நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. பத்தும் பத்து […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more

கலித்தொகை

கலித்தொகை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், அஞ்சல்பெட்டி எண்-8836, பாண்டிபஜார், சென்னை 17, பக். 400, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-035-5.html சங்க இலக்கியங்கள், தமிழின் கருவூலம், மதிப்புடைய மூலதனம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல புலவர்கள், பல்வேறு காலங்களில் பாடியதைத் தொகுத்ததே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதில் கலித்தொகை கலிப்பாவகை இலக்கணம சார்ந்தது. இசை வடிவம் சேர்ந்தது. துள்ளும் இசை நயமும் உவமைச் சிறப்பும், அற நெறிகளும், ஐந்திணை மக்களின் வாழ்வும், பண்பாடும், மரம், விலங்குகள், இயற்கை […]

Read more

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் […]

Read more

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,

சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக்கம் 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html சைவம் மற்றும் வைணவம் ஆகியவை, சமண புத்த சமயங்களை எப்படி எதிர் கொண்டன? சமணத் துறவிகள், புத்த துறவிகள் மக்கள் கூட்டமாக இல்லாத இடங்களை கைவிட்டு, ஏன் தள்ளியே வாழ்ந்தனர்? பெண்கள் ஏன், துறவிகளாக ஏற்கப்படவில்லை? நிர்வாணம் என்றால் என்ன? பட்டிமன்றம் என்ற சொல் எப்படி வந்தது? என்பது பற்றி, இந்த நூலில் […]

Read more

எனது இந்தியா

எனது இந்தியா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2, விலை: ரூ. 355. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-3.html இந்தியாவின் வரலாற்றை புதிய பாணியில் கூறுகிறார், பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இந்து தேச சரித்திரத்தை, ஆதியோடு அந்தமாகக் கூறாமல், முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும், அழகான நடையில் அபூர்வமான படங்களுடன் விவரிக்கிறார். இந்த நூலை எழுதுவதற்காக அவர் இந்தியா முழுவதும் பலமுறை அலைந்து திரிந்திருக்கிறார். சரித்திர புகழ் பெற்ற இடங்களை நேரில் பார்த்திருக்கிறார். அவருடைய கடும் […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் (நூலாசிரியர் சா.கந்தசாமி, வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை 600 017.  பக்கம்: 272, விலை: ரூ. 150) To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 250ரூ To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-809-6.html தமிழ் இலக்கிய வரலாற்றில், பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல், 10-ம் நூற்றாண்டு வரை திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலான தமிழ்ச்சான்றோர்கள் ஏராளமான பாடல்கள் புனைந்து, இலக்கியத்துக்கு வளம் சேர்த்தனர். இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், எழுதியவர்கள் பற்றியும் இந்நூலில் விவரிக்கிறார். தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு […]

Read more
1 2 3 4 5