சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், விலை 420ரூ. சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளிலும் வளங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஆபத்து போன்ற பயனுள்ள பல அரிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இடம்பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027226.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

கலைஞர் ஆயிரம்

கலைஞர் ஆயிரம், வாழ்க்கையெனும் ஓடம், தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 300ரூ. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளால் புகழ்பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பற்றிய கவிதை புத்தகம் இது. டாக்டர் கலைஞர் புகழ் குறித்து, 249 கவிஞர்கள் இயற்றிய உணர்ச்சிகரமான கவிதாஞ்சலியை மு.கலைவேந்தன் அழகாகத் தொகுத்து தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027225.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அவள் பெண்ணியப் பார்வையில்

அவள் பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியம் குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலக அளவில் இன்று ஒரு பேசு பொருள் ஆகிவிட்டது. இந்த நூலில் பெண்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இஸ்லாமிய பேச்சாளரும், எழுத்தாளருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் அலசி ஆராய்ந்துள்ளார். பெண்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை அழகிய தமிழில் எளிய முறையில் எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்குப் பதிப்பகம், விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An Era […]

Read more

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், ஆ.இரா.வேங்கடாசலபதி, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், விலை 600ரூ. சுவடிகளில் மட்டுமே இருந்த பழங்கால தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சென்று எடுத்து பதிப்பித்து அவற்றுக்கு உயிர் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், 1877 முதல் 1942 வரை தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார். ஜி.யு.போப், மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார், சி.தியாகராஜசெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்கள், ஆதுனகர்த்தர்கள் போன்ற பலர் எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை பொக்கிஷமாக சேகரித்து இருந்தார். இவற்றில் 700 கடிதங்கள் முதல் தொகுப்பாக […]

Read more

காக்க காக்க உடல் நலம் காக்க

காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ. கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார். பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், […]

Read more

ஒரு வீடு ஒரு தேவதை

ஒரு வீடு ஒரு தேவதை, கவுசிக் பாபு, கவுதமா வெளியீட்டகம், விலை 275ரூ. 1950-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ் நாட்டின் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக இயம்புகிறது இந்நாவல். கதையின் நாயகன் எளிமையான குடும்பத்தில் பிறந்து பல இடர்களை கடந்து, கல்வி கற்று அரசு பள்ளியின் ஆசிரியராக உயர்கிறான். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்க மனப்பான்மை, பிடிவாதம், அதிகார திமிர் போன்றதாக மாறும் கதாநாயகனின் குணாதிசயங்கள் குடும்பத்தை தவிக்க வைக்கிறது. கதாநாயகனை கரம் பிடித்து வந்தவளும் […]

Read more

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ. இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன. […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 330ரூ. முக்கடவுள்களில் சிவனையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு, சிவனை நேரில் கண்டும், அசரீரி வாக்கைக் கேட்டும் வாழ்ந்த 63 நாயன்மார்களைப் பற்றி, முதலில் சுந்தரரால் பாடப்பெற்றது ‘திருத்தொண்டர் தொகை’. அதன் பிறகு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலவர் சேக்கிழார், இந்த நாயன்மார்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்கள் வாழ்ந்த தலங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைச் சேகரித்து, நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களடன் ‘பெரிய புராணம்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார். இதில் உயர் […]

Read more
1 2 3 6