வரப்பெற்றோம்

  வரப்பெற்றோம் கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், மூ. இராசாராம், குமரன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 100ரூ. கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள், வாதூலன், அல்லையன்ஸ், சென்னை 4, பக். 144, விலை 70ரூ. உங்கள் குழந்தைகளைப் படியுங்கள், ச. அசாப் அலி, தாமரைப் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை 98, பக். 88, விலை 65ரூ. ஈஸ்வரனின் சிறுகதைகள், தெ. ஈஸ்ரன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. சித்தர் பாடல்கள், தொகுப்பு-இரா.முருகன், சாகித்திய அகாதெமி, […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ. சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, […]

Read more

தொல்காப்பியர் காட்டும் குடும்பம்

தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ. தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம், பக். 382, விலை 300ரூ. ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து தயாரித்துள்ள நூல். திருநங்கைகள் பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல மேற்கோள்களுடன் கூடிய ஒரு சில கட்டுரைகள் இருக்கின்றன. சமூகப் பார்வையோடும் சில கட்டுரைகள். நல்ல முயற்சி. -ஜனகன்.   —-   கைகாட்டி, கணபதி அருணாசலம், ஜி. வேதகிரி, 32, கேசவப் பெருமாள் […]

Read more

இது யாருடைய வகுப்பறை?

இது யாருடைய வகுப்பறை?, ஆயிஷா ரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், பக். 248, விலை 150ரூ. கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என பல தளங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடிக் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா? எப்படியாவது வெற்றி என்ற இலக்கை நோக்கி, பிள்ளைகளை மந்தைகளாய் துரத்தும், பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இத்தகைய […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், தலைமுறை பதிப்பகம், சென்னை 32, பக். 160, விலை ரூ. 170 ஒரு பொருளை அதன் இயல்பான நிலையிலேயே விற்பனை செய்தால், விற்பனை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அந்தப் பொருளுக்குள் புதிய பண்பை, உள்ளடக்கத்தைச் சேர்த்து அதன் மதிப்பைக் கூட்டினால் அதை வெற்றிகரமான விற்பனை செய்து லாபமீட்ட முடியும் என்பதை விளக்கும் நூல். சாதாரணத் தேனை விட தும்பைத் தேனுக்கும், சூரியகாந்திப் பூத் தேனுக்கும், மாந்தேனுக்கும், ஏலக்காய்த் தேனுக்கும் மதிப்பு அதிகம் உள்ளதல்லவா? இவ்வாறு மதிப்பூக்கூட்டும் முறையில் […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழில்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 446, விலை 250ரூ. மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்திய டாக்டர் மரியா மாண்டிசோரி, இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம், அகமதாபாத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு The Absorbment Mind என்னும் நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு. அதன் தமிழாக்கமே இந்நூல். குழந்தையின் தனிப்பட்ட மன ஆற்றலை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியர் இல்லாமல், சாதாரணமாகக் கருதப்படும் எவ்விதக் கல்வித் துணைக் கருவிகளுமில்லாமல், பெரும்பாலும் கவனிப்பாரற்றும் தடை செய்யப்பட்டும் இருந்தாலும், […]

Read more

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள்

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள், கனினிகா மிஸ்ரா, தமிழில்-உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சியை மட்டுமே காண முடியும். இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதையில் முன்னேற்றம் என்பது மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியும் என்பது ஓரளவுக்கு உண்மை. காப்பீட்டுத் துறையில் முகவர்களாக வெற்றி கண்ட ஒன்பது பேர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் இது. காப்பீடு முகவர்களான […]

Read more

மணம் வீசும் மணிச்சொற்கள்

மணம் வீசும் மணிச்சொற்கள், நபிமொழித் தொகுப்பு, அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ்(இஸ்லாஹி), இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை 12, பக். 248, விலை 90ரூ. இஸ்லாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் உரைகல் ஒன்று இறை வேதம் குர்ஆன். மற்றொன்று முகம்மது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகும். அதன் அடிப்படையிலான நபி மொழித் தொகுப்பே மணம் வீசும் மணிச்சொள்கள் நூலாக அமைந்துள்ளது. நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் குர்ஆன் மூலமும், இஸ்லாமிய வரலாற்றில் இருந்தும் ஆசிரியர் தகவல்களைப் பதிவு […]

Read more

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி – புலவர் அடியன் மணிவாசகனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக், 116, விலை 90ரூ. தமிழ் மொழியின் தொன்மை, அதன் வளம் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை தமிழனும் தன் அடையாளமான தாய்த் தமிழில் பேசுகின்றானா? எழுதுகின்றனானா? இல்லையே என கோமும் கொள்கிறது. தமிழின் தமிழோடு வாழ்கிறானா என்பதே இப்புத்தகத்தின் உபதலைப்பு. 11 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் வள்ளலார் ஆராய்ந்த தமிழொளி என்ற 2வது அத்தியத்தில் தமிழ் எண்ணிக்கையளவில் […]

Read more
1 2 3 4 5 11