பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை, 2, முதல் தளம், மிதேஷ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 380ரூ. யதார்த்தமில்லாத கவிஞன் இறந்தவன் ஆவான். யதார்த்தம் மட்டுமேயுள்ள கவிஞனும் இறந்தவன் ஆவான். அறிவுக்கப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கு மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாப்லோ நெரூடா. உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதக் கவிஞன் என்று பாராட்டுப் பெற்ற காலகட்டத்திலேயே, பகைவனுடனும் ஒத்துழைக்க விரும்பும் அமெரிக்க ஆதரவு திரிபுவாதி என்று […]

Read more

பாவலர் வரதராஜன் பாடல்கள்

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]

Read more

வண்டாடப் பூ மலர

வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. வண்டாடப் பூ மலர என்ற நூலின் தலைப்பே மிகவும் இலக்கிய நயமாகவும், உச்சரிக்கும்போது இனிமையாகவும் இருப்பதை உணர முடிகிறது. அதைப்போலவே நூலில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பது, மிகச் சிறப்பானதாக உள்ளது. சாமானியர்களின் வாய்மொழிப்பாடல்கள் எப்படி சங்க இலக்கியவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை முதல் கட்டுரையின் மூலம் ஆசிரியர் மிக நுணுக்கமாக, ஆதாரங்களோடு விளக்கியிருப்பது, அவரது நுட்பமான அறிவை வெளிப்படுத்துகிறது. […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450 பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. மகாகவி பாரதியின் கலைச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் நூல். பாரதி ஒரு திருப்புமுனை, பாரதியின் கலைச் சிந்தனைகள், புனை கதை உத்திகள், பாரதியும் பிற நாட்டவரும் என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வடித்துள்ளார் நூலாசிரியர். உலகம் முழுமைக்கும் கவிதை பாடிய பாரதியை ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லியுடனும் கீட்ஸுடனும் ஒப்பாய்வு செய்திருப்பது சிறப்பு. தீக்குள் விரலை வைத்தால்… […]

Read more

கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா. நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். […]

Read more

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ. தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது. ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, […]

Read more

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா, மைக்கேல் ஸ்டென்சன், தமிழில்-எஸ். கண்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 270ரூ. புலம்பெயர்ந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. 18ம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போல இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார். எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று இங்குள்ள பஞ்சமும் பட்டினிச் சாவு, சாதிக் கொடுமையும் அவர்களை விரட்டியது. ஒப்பந்தக் கூலிகள் என்று […]

Read more
1 2 3 4 5 6 11