காலம்

காலம் சிறுகதைகள், தேவ விரதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 120ரூ. பிரபல வார இதழ்களில் வெளியான, பரிசும், பாராட்டுக்களும் பெற்ற ஆசிரியரின் 28 சிறுகதைகளின் தொகுப்பு. தினமலர் வாரமலரில் இவர் எழுதிப் பிரசுரமாகிய கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலின் மற்றொரு சிறப்பு, சிறுகதைக்கு ஆரம்ப வரிகள் கிமவும் முக்கியம் என அன்பர்கள் சொல்வதுண்டு. இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் கடைசி நான்கு வரிகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல சிறுகதைகளின் தொகுப்பு. […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 532, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-188-8.html புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருகக முடியுமா? என்பது முடிய 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் […]

Read more

சங்க இலக்கிய மாண்பு

சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ. சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை. எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் […]

Read more

அழகைத் தேடி

அழகைத் தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. பெண்கள் காதல் என்னும் பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை நாளிதழ்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகள் எடுத்துரைக்கின்றன. இக்கருவை மையமாக வைத்து எழுத்துலகில் தனிச்சிறப்பிடம் பெற்றுள்ள ஜோதிர்லதா கிரிஜா இச்சமூகப் புதினத்தை எழுதியுள்ளார். சூர்யா என்கிற இளம்பெண் முன்பே திருமணமான ஒருவன் சாமர்த்தியமாக அதை மறைத்துக் கூறும் பொய்யை நம்பி, எப்படிக் காதல் வலையில் விழுந்து ஏமாந்து […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-772-8.html தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்ட நூல். விதைக்குள்ளே மரம் மறைந்திருப்பதைப்போல முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும் நமக்குள்ளே மறைந்து இருக்கின்றன. அயராத முயற்சியால், மூடி இருப்பதை அகற்றி ஆற்றலை வெளிப்படுத்தினால் வெற்றிதான் என்பதை எளிமையான கட்டுரைகள் மூலம் கூறுகிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம். நன்றி: தினத்தந்தி, 18/12/13. —-   தமிழ் இன்பம், ரா.பி. சேதுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம். […]

Read more

சிறுகதைகளும் குறுநாவல்களும்

சிறுகதைகளும் குறுநாவல்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 185ரூ. To but this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-0.html உலகப் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் அந்தோன் சேகவ். பிற்போக்கு சிநத்னைகள் மேலோங்கியிருந்தபோது அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர். எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவர். மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் உளவியல் படைப்பாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆக ஒன்பது கதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மேலிடம் என்றதும் பல்லைக் […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது நாலாயிரத்திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம். காரணம் அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக […]

Read more

சீனா அண்ணன் தேசம்

சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-8.html அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியவர்களைப் […]

Read more

அனுபவச் சுவடுகள்

அனுபவச் சுவடுகள், டாக்டர், கு. எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை ரூ.125. வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட அனுபவங்களையும் பற்றியும் நினைவு கூர்தலே இந்நூல். கல்லூரி படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார், ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். அத்துடன் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு குட்டி சிறுகதைபோல் […]

Read more

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல்

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, பக். 160, விலை ரூ.150. இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், […]

Read more
1 4 5 6 7 8 11