ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை, டாக்டர் சுதா சேஷய்யன், கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், பக். 660, விலை 300ரூ. அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் அன்னை லலிதா. அம்பாளை வணங்கும் பேறு, பலருக்கு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட விளக்கவுரை இது. டாக்டர் சுதா சேஷய்யன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், காலம் காலமாக இந்த நாட்டில் போற்றப்படும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு சிறப்புரை எழுதியிருக்கிறார். ஸ்ரீ என்று கூறினாலே அது காலத்தோடு கற்பனை கடந்த பரம்பொருளான அன்னையைக் குறிக்கும். […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம். […]

Read more

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்திருக்கிறார்கள் என்றாலும், சிறுகதை மன்னன் என்ற அடைமொழி புதுமைப்பித்தன் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. உலகத்தரம் வாய்ந்த சிறந்த சிறுகதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதும், அவை காலத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பதும் இதற்குக் காரணம். புதுமைப்பித்தன் வெளியிட்ட புரட்சிகரமான கருத்துக்கள், அவர் நூல்களில் மூழ்கி எடுத்த முத்துக்கள், அவருக்கு […]

Read more

பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள்

பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் சுவைக்க ருசிக்க 150 வகைகள், ஆதிரை வேணுகோபால், உஷா பிரசுரம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86, விலை 80ரூ. பெரும்பாலான இல்லத்தரசிகளின் தினசரி கவலை இன்று என்ன சமைப்பது என்பதுதான். அதுவும் பள்ளிக் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அந்தக் கவலை இருமடங்காகிவிடும். என்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும உணவை அப்படியே திரும்பக் கொண்டுவந்துவிடுகிற குழந்தைகளைப் பற்றிப் புகார் சொல்லாத அம்மாக்கள் குறைவு. அவர்களின் குறைகளுக்குத் தீர்வாக அமைந்துவிடுகிறது ஆதிரை வேணுகோபாலின் புத்தகம். பொதுவாக சமையல் புத்தகங்களில் […]

Read more

எனது பயணம்

எனது பயணம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா பிரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் 462003. விலை 150ரூ. இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல. சவால்கள் நிறைந்த அவரது நெடிய பயணத்தின் ஒரு திருப்பத்தில் இருந்து, அவர் கடந்துவந்த நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்து அசைபோடும் அற்புத உணர்ச்சிக் குவியல்கள். இதனை அவர் உள்ளது உள்ளபடி, சுவையாக கூறி இருக்கும் பாங்க வியக்க வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்படுத்திய தாக்கம், தாய், தந்தை உள்பட பலரது […]

Read more

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ. விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே […]

Read more

தமிழக அரசு (A to Z)

தமிழக அரசு (A to Z), வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பு/எ76, ப/எ 27/1, பாரதீஸ்வர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 600024, விலை 350ரூ. தகவல் களஞ்சியம் இந்த இணையதள உலகில் கூடத்தகவல் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதுவும் அரசுத் துறைகள் பற்றி அறிந்து சலுகைகளையோ அல்லது சான்றிதழ்களையோ பெற வேண்டுமானால் வீட்டுக்கும் அரசு அலுவலகத்துக்கும் நடையாய் நடந்தால்தான் காரியம் நடக்கும். அரசுத் துறைகள் பற்றித் தெரியாததால் படித்தவர்கள்கூடத் தரகர்களை நாடும் நிலை இன்று உள்ளது. இந்தக் […]

Read more

நூறு நாள் நாடகம்

நூறு நாள் நாடகம், அசோகமித்திரன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. To buy this Tamil Book online – www.nhm.in/shop/100-00-0001-713-0.html 1970-71 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. அக்கால அரசியல் இலக்கியம், உலக, உள்ளூர் நிகழ்வுகள் என எல்லாவற்றைப் பற்றியும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் அன்றைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நூலாசிரியருக்கேயுரிய மென்மையான நகைச்சுவை படிப்பதைச் […]

Read more

சங்கே முழங்கு

சங்கே முழங்கு, மு.கோபி சரபோஜி, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாதன் நகர் தொடர்ச்சி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-663-1.html மாதா, பிதாவிற்கு அடுத்து குரு என்ற உயர்நிலையில் வைத்து நம் சமூகம் ஆசிரியரைப் போற்றுகிறது. அந்த ஆசிரியர் நல்லாசிரியராக, சிறந்த ஆசிரியராக மாணவன் விரும்பும் ஆசிரியராக திகழ்வதற்கும் ஆசிரியர் – மாணவனின் கூட்டு வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.   —-   […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150. சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக […]

Read more
1 5 6 7 8 9 11