நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1, அரவிந்தகுமாரன், தமிழ்லீடர், ஆஸ்திரேலியா. போர்க்காலம் தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 532, விலை 300ரூ. மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு […]

Read more

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் […]

Read more

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள், முனைவர் நல்லூர் சா. சரவணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-8.html நாகை வழக்கறிஞர் என்.பி. சுப்ரமணிய சர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை நா.சு.ராஜராம சர்மாவால் வெளியிடப்பட்ட (1914) நூலின் பதிப்பாக்கம் இது. உபநிஷதங்களின் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் பணியில், முனைவர் நல்லூர் சா.சரவணனின் பங்களிப்பு அதிகம். நான்கு வேதங்களுக்குள் காணப்படும் பன்னிரு உபநிஷதங்களையும் வேதங்களின் அடிப்படையில் உள்ளடக்கி […]

Read more

விளக்கு இங்கே ஒளி எங்கே?

விளக்கு இங்கே ஒளி எங்கே?, காஞ்சி அண்ணல், மணிவாசகர் பதிப்பகம், பக். 112, விலை 40ரூ. சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் இவை. காந்திஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து எழுதிய நாடகத்தின் கருவே, நூலின் தலைப்பாக உள்ளது. பொறுமை, அன்பு, நேசம் காக்க விரும்பும் அனைவரும் படிக்கலாம்.   —-   ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

குடை மகுடம்

குடை மகுடம், மனோ இளங்கோ, மனோ ரஞ்சிதா பதிப்பகம், காரைக்குடி 630001, பக். 220, விலை 100ரூ. புதுக்கவிதை நூல். அதிகரித்த ஊழலை ஒழிக்க முருகனை வருமாறு அழைக்கும் கவிஞர், எந்தப் புற்றில் எந்தப்பாம்போ… முருகா உன்மயிலை ஏவிவிடு முருகா என்று அழைப்பது உட்பட பலகவிதைகள் உள்ளன.   —-   பசும்பொன் 24 காரட், கவிமுரசு கந்தசாமி, கவிமுரசு புத்தக பூங்கா, பக். 26, விலை 70ரூ வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல். அதில் ஒன்று தேவரய்யா, உன் […]

Read more

கட்டுரைக் களஞ்சியம்

கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ. செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் […]

Read more

சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு.சம்பந்தன், பாரத் பதிப்பகம், விலை ரூ.125. சென்னை மாநகர் குறித்து இதுவரை, ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களை விட, சென்னையின் வரலாறு, அதன் பிரமாண்ட வளர்ச்சி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தன்மை உடையவை. அதனால்தான், சென்னை மாநகர் குறித்து, நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்தவகையில், இந்த நூலிலும், சென்னையின் சிறப்புகள் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களின் பெருமையும், சென்னை நகரின் வளர்ச்சியும், சென்னைக்கு இந்தியாவிலும், உலகிலும் கிடைத்து உள்ள சிறப்புகளும், இந்த […]

Read more

சென்னை 1639க்கு முன் பின்

சென்னை 1639க்கு முன் பின், டாக்டர். கு. பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பற்றி, அறிந்து கொள்வதில் யாருக்கும் எப்போதும் ஆர்வம்தான். சென்னை, நாட்டின் மற்ற நகரங்களுக்கு இணையாக உருவெடுத்து வருகிறது. ஆனாலும், சென்னையின் வாழ்வியல் வரலாற்றில், 1639 சிறப்பு மிகு ஆண்டு. ஏனெனில், அதுதான் சென்னை பிறந்த ஆண்டு. சின்னஞ்சிறு ஊர்களின் சிதறலாக காணப்பட்ட, சென்னைப் பட்டினத்தின் ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. வடசென்னையில் நாணயத் தொழிற்சாலை உருவாக்கும் திட்டத்தின் படி, தங்க நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டடம் உருவாக்கப்பட்டது. […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே. ரோடு, சென்னை 18, பக். 502, விலை 450ரூ. இந்த தேசத்திற்கு ஒரு சமர்ப்பணம். நிஜம், புனைகதை இரண்டும் பின்னிப் பிணைந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதினம். ஆக1ட் 15 இந்திய சுதந்திர தினத்தில் பிறப்பெடுத்த இரண்டு உன்னத இதயங்களுடைய வாழ்க்கையின் பின்னணியில் உருவான படைப்பு இது. இன்றைய நாளில் மக்களின் மனங்களுடன் பிணைந்திருக்கம் வலைத்தளம் வாயிலாக பல உன்னத செய்திகளையும் அறிய […]

Read more
1 7 8 9 10 11