சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முகிலை ராஜபாண்டியன், முனைவர் கே.ஆர். லட்சுமி, முனைவர் கி. அய்யப்பன், முனைவர் கெ.ரவி, சி.ராமச்சந்திரன், விசாலாட்சி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், விலை 300ரூ. அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடையும் அவமானங்கள், சொந்த குடும்பமே புறந்தள்ளும் அவலம் என இதற்கு மேலும் தாங்காது கசப்பு என்கிற நிலையில்தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெரும்பாலான அரவாணிகள். இவர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் அக்கறை எத்தகையதாக இருக்க வேண்டம் என்பதை 58 ஆய்வாளர்களின் பார்வையில் தந்திருப்பதே இந்த நூல். […]

Read more

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள், என். கணேசன், கருத்துளை மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 33, விலை 110ரூ. நாகரீக உலகில் அர்த்தமுள்ள வாழவு வாழ நினைக்கும் மனிதனுக்கு அதற்கான வழிகள் தெரிவதில்லை. அந்த நிறைவாழ்வுக்கான பல்வேறு பாடங்களை சாதனை படைத்தவர்களின் வாழ்வியல் மேற்கோள்களுடன் தன்னகத்தே கொண்ட நூல் இது.   —-   அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும், எம்.ஆர். ஆனந்தவேல், ஸ்ரீஹனுமான் டாரட் எண் கணிதே ஜோதிட ஆய்வுமையம்,9, ராகவேந்திரா நகர், ஐ.ஓ.பி. காலனி, பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, […]

Read more

என் சரித்திரச் சுருக்கம்

என் சரித்திரச் சுருக்கம், கி.வா. ஜகந்நாதன், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 108, பக். 544, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-340-6.html எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில் உ.வே. சாமிநாதையர் என் சரித்திரம் என்ற பெயரில் தொடராக எழுதிய தன் வரலாறு மிகவும் பிரபலமானது. அவர் எழுதிய 122 அத்தியாயங்களை 58 அத்தியாயங்களாகச் சுருக்கி, ஆனால் ஐயரின் வாழ்க்கைச் சம்பவங்களில் முக்கியமான எதுவும் விடுபட்டுவிடாமல் கவனமாகத் தொகுத்து என் […]

Read more

இறகுதிர் காலம்,

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, பீளமேடு, கோயம்புத்தூர் 641004. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரி, குளம், மலைகளின் இன்றைய நிலை என்ன? பறவையினங்கள், மற்ற உயிரினங்கள் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றன? விடை தேடுகிறது இந்நூல். நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பட்க. 160, விலை 70ரூ. இளைய தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தைத் தரவேண்டும் என்று நோக்கத்துடன் […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]

Read more

புனையா ஓவியம்

புனையா ஓவியம், அநன், காவ்யா, சென்னை 24, பக். 210, விலை 180ரூ. சங்கத் தமிழ் நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது இந்நூல். மடல், மன்றல், காஞ்சி, நடுகல், வையை, யானைக்கொடி, மருதம், பாலை, கோ, உணவு, உடை, புனையா ஓவியம், வி, நீர் மேல் எழுந்த நெருப்பு, அகத்தில் வரலாறு என சின்னச் சின்னத் தலைப்புகளிலான 15 கட்டுரைகளின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு. தலைப்புகளில்தான் சொற்சிக்கனம். ஆனால் கட்டுரைகள் விரிவாகவும், ஆழமாகவும், […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ. புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-6.html சத்தமே இல்லாமல் சாதனை படைக்கச் சிலரால்தான் முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செ.திவான். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தோண்டி எடுத்துவந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றிய ஒரு சிலரில் திவான் குறிப்பிடத்தக்கவர். முஸ்லிம் மன்னர்கள் என்றாலே… கொள்ளையடிக்க வந்தவர்கள், இந்துக்களுக்கு வரி விதித்தவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்-என்பதே வரலாறாக திணிக்கப்பட்ட சூழ்நிலையில், அவர்களின் இன்னொரு பாகத்தைக் காட்டியவர் திவான். […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் […]

Read more

தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்). கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், […]

Read more
1 8 9 10 11