வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள், சபரீஷ் பாரதி, எஸ் 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. தினத்தந்தி குடும்ப மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெருவாரியான வரவேற்பை பெற்றது சுப்ரஜா எழுதிய வெண்ணிற இரவுகள். ஒரு மர்ம பங்களா. அதை காலம் காலமாக அனுபவத்து அதே நேரம் அதன் ரகசியத்தை மூடி மறைக்கும் ஒரு செல்வாக்குள்ள குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒருத்தியான நிலா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பங்களா வீட்டுக்கு வருவதில் தொடங்குகிறது. விறுவிறு கதைக்களம். […]

Read more

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு, ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், 69/1, சாமியர்ஸ் ரோடு, சென்னை 28, விலை 72ரூ. தமிழ் இசையில் சிகரத்தைத் தொட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. பாரதரத்னா பட்டம் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாறு படக்கதை ரூபத்தில் வெளிவந்துள்ளது. கர்நாடக சங்கீத ஆராய்ச்சியாளரும், அதுகுறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியவருமான லட்சுமி தேவ்நாத் முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது. அவர்க தையை ஆங்கிலத்தில் எழுத, அதை அழகிய தமிழில் பத்மா நாராயணன் மொழி பெயர்ததுள்ளார். படங்களை அழகாக வரைந்துள்ளவர் ஜி. சேகர்.   —-   […]

Read more

நதியின் பிழையன்று

நதியின் பிழையன்று, வெ. இன்சுவை, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ. காலம் மாறிப்போய்விட்டான். அவனுடைய வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப்போய்விட்டன. சரிந்து போய்க் கொண்டிருக்கும் பண்பாட்டு சீரழிவை எப்படி சரிசெய்யப் போகிறோம்? விதவிதமான மனிதர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனம் கொதித்து தனது கோபத்தையும், ஆற்றாமையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியை வெ.இன்சுவை.   —-   வளம் தரும் பரிகார ஸ்தலங்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ அலமு பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, […]

Read more

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு, எம்.எஸ். கோவிந்தராஜன், தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 75ரூ. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 38 சாதனையாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கவிஞர் மு.மேத்தா, என்.சி. மோகன்தாஸ், மெர்வின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டையில் இருந்து குழந்தைப் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்த காலக்கட்டம் பற்றி பலர் விவரித்துள்ளனர். மாணவராக இருந்தபோதே பி. வெங்கட்ராமன் (வடமலை அழகன்) டிங்டாங் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பணியாற்றியது சுவையான தகவல். சாதனையாளர்களின் அனுபவங்களை அறிவது, சாதனைகள் […]

Read more

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில்

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில், செ.மு. குபேந்திரன், கவிநிலவன் பதிப்பகம், தருமபுரி, பக். 80, விலை 40ரூ. கவிதைகளுக்குள் ஒரு புன்னகையை, ஒரு பூவை, ஒரு காதலை, ஒரு நட்பை, ஒரு கிராமத்தை, ஒரு பூகம்பத்தை ஒளித்து வைக்க முடியும் என்பதை உணர்த்தும் ஓர் எளிய கவிதைத் தொகுப்பு. தன் கிராமத்தின் சொர்க்கத்தைச் சொல்லி பட்டணத்தின் பவிசைச் சாடுவதும், தாய்மையின் அருமையை மனதில் பதித்துவிட்டுப் போவதும், சாதிக்கப் பிறந்தவனிடம் சாதியைக் கேட்டு தடைக்கல்லாய் இருக்கும் சமூக அவலத்திற்கு சவுக்கடி கொடுப்பதும் ஊர் புறத்தே உள்ள […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ. பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி, கல்யாணி வெங்கடராமன், திருமதி கல்யாணி வெங்கடராமன், 21ஈ, நியூடெக் ஐயப்பா என்க்ளேவ், ஸ்ரீ மாதவன் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை 34, பக். 480, விலை 280ரூ. இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகா புருஷர்களில் தலைசிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என்று எல்லா மதங்களும் அந்த ஒரே கடவுளைத்தான் அடைய வழிகாட்டுகின்றன. எனவே எந்த மதத்தையும், அதன் நெறிகளைஹயம் நிந்திக்கக்கூடாது. நேசிக்க வேண்டும் என்று சமய நல்லிணக்கத்திற்கு முதன் முதலாக வழிகாட்டியவர். காளிதேவியை நேருக்குநேர் தரிசனம் செய்தவர். இந்த […]

Read more

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது, எஸ்.என். நாகராஜன், கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. கம்யூனிஸத்தைத் தத்தவார்த்த நோக்கில் அணுகிப் படிப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய பெயர், எஸ்.என். நாகராஜன். தமிழகத்தில் வாழும் மார்க்சிய ஆய்வாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எஸ்.என்.என். நடத்திய மார்கசியம் இன்று என்ற இதழ் மூலமாகத்தான் இன்றுள்ள பலரும் மார்க்சியத்தை உணர்ந்துகொண்டார்கள். மார்க்சியத்தையும் வைணவத்தையும் சேர்த்து சுண்டவைக்கும் காரியத்தை எஸ்.என்.என். செய்திருந்தாலும் மார்க்சிய மூலத்தை தமிழகத்தில் அவர் விதைத்ததை, […]

Read more

சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more
1 7 8 9 10