தோழமைக் குரல்

தோழமைக் குரல், ஆளூர் ஷானவாஸ், கரிசல் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை 42, விலை 250ரூ. தொல். திருமாவளவன் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆற்றியிருக்கும் களப்பணிகளை விவரிக்கிறது இந்நூல். 1990களிலிருந்து அவருடைய உரைகள், அறிக்கைகள், தலையங்கம், கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்திருப்பது பதிவாகியிருக்கிறது.   —-   நமோ நாமம், கோவி. லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. குஜராத்தில் மோடியின் ஆட்சியில் வறுமை, பெண்களின் நிலை, மது விலக்கு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் […]

Read more

தத்துவவேசினி நூல் வரிசை

தத்துவவேசினி நூல் வரிசை, The thinker இதழ்களின் வழி பதிவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தமிழ்நாட்டின் நாத்திக வரலாறு திராவிடர் கழகத்துக்கும் நீதிக்கட்சிக்கும் முன்பே 1878-1888 வரை நாத்திக சங்கம் சென்னையில் செயல்பட்டு வந்ததை ஆவணங்களுடன் விளக்கும் பல தொகுப்பு நூல்கள் இவ்வரிசையில் உள்ளன. தத்துவம்-கடவுள்-நாத்திகம், சாதி-பெண்கள்-சமயம், காலனியம்-விஞ்ஞானம்-மூடநம்பிக்கைகள் ஆகியவை தமிழிலும், 2 வரிசை நூல்கள் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கூறுகிறது.   —-   சேரன்மாதேவி, பழ. அதியமான், காலச்சுவடு. குருகுலப் போராட்டமும் திராவிட எழுச்சியும் சேரன்மாதேவி […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 224, விலை 100ரூ. நூலின் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும் நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில் நூலாசிரியர் தம் எண்ணச் சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம். திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் […]

Read more

மாவோவின் நெடும்பயணம்

மாவோவின் நெடும்பயணம், டிக் வில்சன், தமிழில்-நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், 97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 448, விலை 250ரூ. பூமிக கோளத்திற்கு வெளியே காணக்கிடைக்கின்ற ஒரே காட்சி சீனத்தின் நெடுஞ்சுவர் என்று கூறப்படுவதுண்டு. அதைப்போன்றே மனித குலத்தின் போராட்ட வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த நெடும்பயணமும் தனித்தன்மை மிக்க ஒரு நிகழ்வாகும். மாவோவின் நெடும்பயணம் என்ற அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்நூல் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது என்பதே இதன் முக்கியத்துவத்தையும் பரவலான […]

Read more

நாளும் நாளும் நல்லாசிரியர்

நாளும் நாளும் நல்லாசிரியர், வெ. கணேசன், வி.கே. கார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 386+22, விலை 250ரூ. மேட்டுப்பாளையம் கல்லாறு என்ற இத்தில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் நிறுவிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் வெ. கணேசன் எழுதிய, From A Good Teacher to A Great Teacher என்ற ஆங்கில நூலினை தமிழைசிரியர் வி.கே. கார்த்திகேயம் மொழி பெயர்த்து, நாளும் நாளும் நல்லாசிரியர் என்ற தலைப்பில் தந்துள்ளார். ஆசிரியர்கள், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவதுடன், மாணவர்களையும் […]

Read more

மனம் வரைந்த ஓவியம்

மனம் வரைந்த ஓவியம், பாவண்ணன், அகரம், மனை எண்1, நிர்மலா நகர், தஞ்சாவூர், பக். 224, விலை 150ரூ. பாவண்ணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, மதிப்புரைகள் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். பெங்களூரூவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், சொந்த முயற்சியால் கன்னட மொழியைக் கற்றவர். கன்னட மொழியிலிருந்து முக்கியமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். அதன் மூலம் மொழிபெயர்ப்புக்கான […]

Read more

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும்

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும், அம்ஷன் குமார், சொல் ஏர் பதிப்பகம், 30ஜி, கல்கி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41. சினிமா விமர்சகர், கட்டுரை எழுத்தாளர், இயக்குனர் எனப் பல அடையாளங்கள் கொண்ட அம்ஷன் குமாருக்குப் பதிப்பாளர் என்ற இன்னொரு அடையாளமும் உண்டு. இந்தாண்டு சினிமா தொடர்பான மாற்றுப் படங்களும் மாற்றுச் சிந்தனைகளும் என்னும் தன் புத்தகத்தைத் தனது சொல் ஏர் பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்துள்ளார். புத்தகம் பதிப்பதையும் நான் ஒரு சினிமா நுட்பத்தைப் போலவே பார்க்கிறேன். சினிமாவின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுபோல இதில் […]

Read more
1 8 9 10