மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறை. திரு.நாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை 62, பக். 784, விலை 600ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் போன்ற பல தகவல்களோடு அவரது இறுதிக்காலம் வரை (1950) நிகழ்ந்த […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 216, விலை 115ரூ. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்ய நாமங்களைச் சொன்னாலே போதும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணன் நாமம் சொல்லும் க9தைகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களை, மாருதியின் உயிரோட்டமான வண்ண ஓவியங்களுடன் தந்து விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். கண்ணனைப் போற்றம் கதைகள் அனைத்தும் ஸ்ரீ கண்ணனக்கே உரிய குணங்களான சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, குதூகலம் ஆகியவற்றை எளிமையாக அனைத்துத் தரப்பு […]

Read more

அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ. சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் […]

Read more

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு, பேரா. ஜான்சி ஜேக்கப், மொழிபெயர்ப்பு யூமா வாசுகி, புலம், சென்னை, விலை 60ரூ. பேரா. 1936ஆம் ஆண்டு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நாட்டகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக இயற்கையுடன் இருத்தல் என்னும் முகாமை நடத்தினார். 1979ஆம் ஆண்டு SEEK (Society for Environmental Education in Kerala) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ. உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய […]

Read more

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்

மனதெனும் குரங்கை வெல்லுங்கள், ஆனந்த் பட்கர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஷாஷ் சேம்பர்ஸ், 7ஏ, சர் பிரோஸ்ஷா மேத்தா ரோடு, போர்ட், மும்பை 4000001, பக். 288, விலை 350ரூ. அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு நொடி கிளைக்கு கிளை தாவும் குரங்கைப்போல், அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பது, எளிதான காரியமல்ல, எனினும் முயன்று அரும்பாடு பட்டு வென்றவர்களும் உண்டு. இந்நூலாசிரியர் ஐந்து தலைப்புகளில் மனதை […]

Read more

என்மகஜெ

என்மகஜெ, மலையாளத்தில் அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 288, விலை 200ரூ. மலையாளச் சூழலியல் நாவல். மனச்சாட்சியை, அதிர வைக்கும் படைப்பு என்ற எச்சரிக்கை அறிவிப்புடன் ஆரம்பிக்கும், நாவலின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்து செல்லுகையில், ஒரு மிகச் சிறந்த, தரமான புதினத்தைப் படித்து முடித்த நிறைவுடன், கண்களை மூடி சிந்திக்க ஆரம்பிக்கிறோம். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், நாசகார அறிவியல் வன்புணர்ச்சி செய்து கொண்டேயிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் கைபேசிக் கோபுரங்களினால், குருவி இனத்தை டைனோஸருடன் சேர்த்து, அருங்காட்சியில் […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை 17, பக். 288, விலை 90ரூ. நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம், சிறுகதைகளுக்கும் விரிந்தன. ஆனால், கவிஞராய் அறிமுகம் ஆன பாரதியார், பாரதிதாசன் கதைகள், கட்டுரைகள் உரிய இடத்தைப் பெறவில்லை. பாரதிதாசன் சிறந்த கதாசிரியர், நாடக ஆசிரியர், இதழ் ஆசிரியர். அவரது பன்முகத்திறன்கள் இன்னமும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்கிறது, பாரதிதாசனின் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more
1 6 7 8 9 10