வண்டிப் பாதை

வண்டிப் பாதை, நாவல் குமாரகேசன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 376, விலை 260ரூ. தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சரித்திர கதையை படைத்திருக்கிறார் குமாரகேசன். கதையின் களமாக வருவது ஒரு மலையடிவார பூமி. கொங்கு சீமையின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த மண்ணிற்கு வலிமையும், வன்மமும், வலியும் அதிகம். பாண்டிய நாட்டின் வடக்குப்புற எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கருமலையும் தொடர்ச்சி ரங்க மலையும் கூட கதையில் வருகின்றன. கொங்குப் பகுதி மக்களின் கிராம வாழ்வை, […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல், வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், பக். 104, விலை 100ரூ தமிழர் வாழ்வில் தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல் என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம்தான். இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]

Read more

தேடி வந்த நன்றி

தேடி வந்த நன்றி, உடுமலை நன்னன், சிவா பதிப்பகம், திருப்பூர் மாவட்டம், விலை 100ரூ. அவள் தந்த பரிசு, கைதியின் மனைவி, செல்லப்பெண், கெட்டிக்காரி போன்று பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 26 கதைகள் இந்நூலில் உள்ளன. இந்த சிறுகதைகள் ஏற்கனவே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவையாகும். இந்த கதைகள், வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- விநாயகர், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 22ரூ. விநாயகர் […]

Read more

சமுதாய வீதி

சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி நம் கண் முன் நடமாட விட்டவர் தீபம் நா. பார்ததசாரதி. சினிமா உலகில் நுழைய விரும்பி, சினிமா துறையில் அடியெடுத்து வைத்து, நல்ல மனிதனாக வாழ்ந்த கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை.  நா.பா.வின் இந்த சமுதாய வீதி அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாவல். தற்போது அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- வரலாற்று நாயகர் தந்தை பெரியார், […]

Read more

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி, வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-0.html வழிகாட்டும் சாதனையாளர்களின் வெற்றிக்கதைகள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஏராளமான இளைஞர்கள் வெற்று அரட்டைகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, சில இளைஞர்கள் இணையத்தையே ஆக்கபூர்வமான வணிகத்தலமாக மாற்றி சாதித்திருக்கிறார்கள். இவர்களது வெற்றியில் பலருக்கான வெளிச்சம் இருக்கிறது. என்னென்ன இடர்பாடுகள் குறுக்கே நின்றன? அவற்றை எப்படியெல்லாம் கடந்தார்கள்? முழுமையாக தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்கள் பலரது தயக்க முடிச்சுகளை அவிழ்க்கும். புதிய சிந்தனைகளை […]

Read more

சகுனி

சகுனி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 410ரூ.‘ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-3.html சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ். மகாபாரத கதையில் […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நடிகர் சூர்யா பற்றிய வண்ணமயமான புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. படிப்பை முடித்ததும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் சூர்யா. கூச்ச சுபாவம் உடைய அவர் சினிமாவுக்கு வந்ததும், படிப்படியாக உயர்ந்து இப்போது சிகரத்தைத் தொட்டிருப்பதும் நம்பமுடியாத உண்மை. இதுபற்றிய விவரங்களுடன் ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது முதல் குழந்தை பிறந்தபோது வீடியோ படம் எடுத்தது முதலான நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்துள்ளார் சூர்யா. சூர்யா நடித்த […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more
1 2 3 4 8