சேகுவாராவின் பொலிவியன் டைரி
சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். […]
Read more