நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

அம்மாவின் கோலம்

அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ. மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை. “பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை உங்கள் பாக்குத்தூளைப் போல” -போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கதவுக்குள் திரியும் மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள முத்திரை என்னவோ ‘பெண்கள் ஜாக்கிரதை’ -இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள், ம. நித்யானந்தம், மணிவாசகர் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. காசி முதல் ராமேஸ்வரம் வரை 400க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்த அனுபவம் கொண்ட ம. நித்யானந்தம், ‘சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புடன் புராணத் தகவலுடன் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் இந்நூலில் அளித்துள்ளார். கோயில்கள் என்பது நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பு. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, கவிஞர் க. அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 10ரூ. கவிஞர் ச. அம்சப்ரியா பல்வேறு இதழ்களில் கவிதை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறுதொகுப்பு. இது 24 பக்கங்கள் கொண்ட கையேடு. ‘கவிதைக்குள் அலையும் மனச்சிறகு’ என்ற பெயரில் பல கவிஞர்களின் கவிதைகள் அர்த்தத்தோடு சிலாகிக்கப்பட்டுள்ளது. ராஜ சுந்தராஜன் எழுதிய ‘தழும்புகள்’ என்ற தலைப்பில்… அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம் வந்தது அப்படியும் வாழ்கிறோம் நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தன் மேனி […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 168, விலை 100ரூ. Master of all subjects – என்று பாராட்டப் பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணனின் வாரிசுதான் இந்நூலாசிரியர். இவரும் தன் தந்தையைப்போல தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள எழுத்தாளர். இதுவரை 85 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து, எம்.ஃ.பில்., பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றவர்களும் உண்டு. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்து உலக நாடுகளையும் சுற்றி வந்தரும்கூட. தினமலர் வார மலரின் முன்னேற்றமான வாழ்க்கைக்கு உரிய விஷயங்களைக் குறித்து, […]

Read more

இது நம் குழந்தைகளின் வகுப்பறை

இது நம் குழந்தைகளின் வகுப்பறை,  சூ. ம. ஜெயசீலன், அரும்பு பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.160. மாறி வரும் உலகமயச் சூழலில் கல்வி வணிகமாக்கப்பட்டு, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில், வகுப்பறைச் சூழல், பாடத்திட்டங்களும், மதிப்பெண் சார்ந்த வெற்றி தோல்விகளும் அவ்வப்போது விவாதப் பொருள்களாகி வருகின்றன. இதுபோன்ற நிலையில், கற்றல் – கற்பித்தலில் சமூக அக்கறையுடன் பல்வேறு கூறுகளை இந்நூலில் அணுகியுள்ளார் நூலாசிரியர். பள்ளிப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட நினைவுகளையும், சமூகத்தில் பெரும் ஆளுமைகளாக வலம் வருவோர், சக ஆசிரியர்கள், […]

Read more

வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150. திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன். 19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. […]

Read more

1000 செய்திகள் (பாகம் 1)

1000 செய்திகள் (பாகம் 1), முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. 1000 செய்திகளை (சிறிய துணுக்குகள்) 4 புத்தகங்களாக வெளியிட ‘முக்தா’ சீனிவாசன் முடிவு செய்து, அதில் முதல் புத்தகத்தை (247 செய்திகளுடன்) கொண்டு வந்துள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம். உதாரணமாக 25-வது பக்கத்தில் நாமத்துடன் காட்சியளிப்பவர் எஸ்.ஏ.பி. அல்ல. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல் தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய […]

Read more

என். கிருஷ்ணசாமி-படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு

என். கிருஷ்ணசாமி, படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம், விலை 130ரூ. சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று “படிக்காத மேதை”. பல கட்டங்களில், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்து விடுவார் சிவாஜி. அந்தப் படத்தை தயாரித்தவர் “பாலா மூவிஸ்” என். கிருஷ்ணசாமி. படத்தைத் தயாரிக்கவும், ரிலீஸ் செய்யவும் அவர் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த போதிலும், அதனால் லாபம் அடைந்தவர்கள் விநியோகஸ்தர்கள்தான். என்.கிருஷ்ணசாமி வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். […]

Read more
1 2 3 4 5 6 9