லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி, எஸ்.எஸ்.வி, மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறி இருக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அந்த நாட்டின் பிரதமராக இருந்த அவர், தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம், ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார். அவரது மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன் ஆகியவற்றை உலகமே வியந்து பாராட்டுகிறது. அத்தகைய லீ குவான் யூ வரலாற்றை, சிங்கப்பூரின் […]

Read more

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், இ.எஸ்.எஸ்.ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 250ரூ. மருத்துவர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று, பன்முகம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், எழுதி இருக்கும் இந்த நூல், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். நீரழிவுக்கான அறிகுறிகள், அந்த பாதிப்பைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள், தனக்குத் தானே இன்சலின் எவ்வாறு போட்டுக் கொள்வது போன்ற அனைத்தையும் மிக விரிவாக அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகத் தந்து இருக்கிறார். நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறைகள், மற்றும் அதற்குரிய […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ. இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன். எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ. மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. […]

Read more

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், ஏ.வினோத்குமார்,கண்ணதாசன் பதிப்பகம், பக்.245, விலை ரூ.160. கரு உருவானது தொடங்கி அவற்றில் ஏற்படும் மனவளர்ச்சி, குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பயம், இடதுகைப் பழக்கம், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்றவை, குழந்தைகளின் படிப்பு தொடர்பான உளவியல் என 3 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் பிறந்த பின்பு தன் முழு வாழ்நாளில் உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உயிரியல் மாற்றங்களைக் கடக்கிறானோ, அதைவிட அதிகமான உயிரியல் மாற்றங்களை அவன் கருவறையில் இருக்கும் 10 மாதங்களில் கடக்கிறான். எனவே ஒரு பெண் தாய்மை […]

Read more

முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

மொழிகளின் தாய்

மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ. மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ. ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ, ப்ரியா கல்யாணராமன், குமுதம், விலை 150ரூ. திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோயின்மை, பில்லி சூனியங்களிடமிருந்து பாதுகாப்பு என ஏராளமான வரங்களை அள்ளித்தரும் ஆலயங்களின் அற்புத வரலாறு அடங்கிய நூல். அம்மன் மீது பெண்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நெருக்கத்தை நூலாசிரியர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். குமுதம் இதழில் வெளிவந்த தொடர்களின் தொகுப்பே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more
1 3 4 5 6 7 9