சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்), பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. எழுமின், விழிமின் என முழங்கிய வீரத்துறவி; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தவர்; சீர்திருத்தவாதியாகவும், ஜாதி மத இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனாவாதியாகவும் விளங்கியவர். இந்து மதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. பாரதத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய முன்னோடி. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 300 […]

Read more

குளிரும் தேசத்துக் கம்பளிகள்

குளிரும் தேசத்துக் கம்பளிகள், சதீஸ் செல்வராஜ், நெம்புகோல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை, போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் விவரிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், வணிகத்துக்காகவும், மூலப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் போர்த்துக்கீசியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள் செய்த முயற்சிகளின் விளைவாக பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த […]

Read more

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி, நாகூர் சா.அப்துர் ரகீம், அறிவு நாற்றங்கால், விலைரூ.110. நபிகளின் பிறப்பும் வளர்ப்பும், வருகை, முன்னறிவிப்புகள், துாதர் ஆனது, உதாரண வாழ்வும் வரலாறும், முழுமை நிலை, வழிகாட்டல், தந்த செய்திகள், அற்புதங்கள், தோழர்கள், நிகழ்த்திய உரைகள் என்ற 17 தலைப்புகளில் விரிவடைகிறது. வரலாற்றுச் செய்திகளை அழகுடன் வரிசைப்படி விளக்குகிறார். விவிலியத்தில் இயேசு, யோவான் சுவிஷேசத்தின் வசனம், நபிகள் பெருமான் வருகையைக் கூறுவதாகவும் எழுதியுள்ளார். புனித நபிகள் பெருமை பேசும் நுால். – முனைவர் மா.கி.ரமணன் நன்றி: தினமலர், 28/11/21. இந்தப் […]

Read more

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2, பழனியப்பா பிரதர்ஸ், கவிஞர் செல்லகணபதி, விலைரூ.110. திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும். குறளைப் பாடுவோம் இரண்டாம் தொகுதியில் அதிகாரத்துக்கு ஐந்து குறள்கள் வீதம் 20 அதிகாரங்களின், 100 குறட்பாக்களுக்குப் பாடல் உரை எழுதியிருக்கிறார். செய்த உதவியை மறத்தல் கூடாது; தீமையை அப்பொழுதே மறந்துவிடல் வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார். அந்த நல்ல பழக்கத்தைக் குழந்தைகள் கற்றுக் கொள்ளத் துாண்டுகிறார். குழந்தைகளுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து புரிந்து பாடப்பட்டுள்ளது. எளிய […]

Read more

உலகக் கவிஞர் தமிழ்ஒளி

உலகக் கவிஞர் தமிழ்ஒளி, மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. கவிஞர் தமிழ்ஒளியுடன் பழக வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், கவிஞரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும், படைப்புகள் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார். 1924 -ஆம் ஆண்டு பிறந்த விஜயரங்கம், கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய கல்வே கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய விஜயரங்கம், பாரதிதாசனின் மாணவராகி அவருடைய சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற புனைபெயரை வைத்துக் கொள்கிறார். 1947 – ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் […]

Read more

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு, கா.ந.கல்யாணசுந்தரம், கவிஓவியா பதிப்பகம், விலைரூ.150 புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால். தேவைக்கேற்ப ஓவியங்களை அமைத்தும் சிறப்புற விளங்குகிறது. திணை, துறை விளக்கங்கள், புறநானுாற்று செய்யுள்களில் பாடப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை, கிள்ளி வளவன், அதியமான், குமணன், திருமுடிக்காரி, பேகன், வேள்பாரி, அறிவுடைநம்பி, ஓரி, கோப்பெருநள்ளி, ஆய், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கரிகால் பெருவளத்தான், பள்ளி துஞ்சிய நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, சேரல் இரும்பொறை போன்ற மன்னர்களின் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. – முனைவர் […]

Read more

திருமணமும் ஒழுக்கநெறிகளும்

திருமணமும் ஒழுக்கநெறிகளும், முனைவர் சி.ஸ்ரீராம், காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், விலைரூ.350 இயற்கை வடிவமைத்த திருமண உறவின் அருமைகளைப் பாலியல் வேட்கையின் பின்னணியில் உலகளாவிய பார்வையில் ஆய்ந்து, நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ஆங்கில நுாலின் மொழிபெயர்ப்பு வடிவம். பாலியல் உறவு என்பது உணவு, குடிநீர் மீதான வேட்கை போன்றதே என முன்மொழிந்து, உணர்வியல் போக்குகளை உற்றுநோக்கி, மூட நம்பிக்கைகளை முற்றிலும் மறுதலித்துத் தெளிவான கண்ணோட்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க கால சமூகத்தில் தனிநபர் உணர்வு, காதல், குடும்பம், நாடு எனும் பல […]

Read more

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு,  செந்துறை முத்து,  முல்லை பதிப்பகம், பக்.576, விலை  ரூ.500. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, இசைக் கலை, சோதிடக் கலை என நமக்குத் தெரிந்த கலைகள் சில இருந்தாலும் தெரியாத கலைகள் நிறைய உள்ளன. எமகண்டக்கவிதைக் கலை, கனா நூற்கலை, தம்பலக் கலை, தொகுப்புக் கலை, திருவிழாக் கலை ஆகியவற்றைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருப்பார்கள். இந்நூல் அறுபத்து நான்கு கலைகள் எவை எவை என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.600 தினமலர் – வாரமலர் இதழில், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அந்துமணி எழுதி வரும், பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ பகுதி. இந்த பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஏற்கனவே மூன்று புத்தகங்களாக வந்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிகளை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. புத்தகங்களின், ‘என்னுரை’ பகுதியில், பா.கே.ப., பகுதியை தன் டைரி என குறிப்பிட்டுள்ளார் அந்துமணி. சாதாரண மனிதனின் […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், சுஜாதன், காவ்யா, விலைரூ.350. இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். மலையாள மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து உள்ளார், ப.விமலா. இந்த பூ உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தார் விவேகானந்தர். அடிப்படை வளர்ச்சிகள் கூட காணாத காலக்கட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, ஞானம் பெற்றவர்; வெளிநாடுகளிலும் பயணம் செய்து ஞானத்தை பரப்பியுள்ளார். அந்த மகத்தான பயணங்களையும், அதன் அடியொற்றிய வாழ்க்கையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read more
1 5 6 7 8