அக்கா

அக்கா, திலகபாமா, காவ்யா, விலைரூ.600. ஐம்பதுகளின் இறுதியில், 23 வயதில் தமிழக அரசியலில் நுழைந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் பெரும் பங்கு ஆற்றியவர். ஏழு முறை சட்டசபை உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சட்டசபையில் ஆற்றிய உரைகளையும் தொகுத்துள்ள நுால். காமராஜரை முதல்வராகக் கொண்ட ஆட்சியில் சட்டசபை உறுப்பினராகத் திகழ்ந்தார். நிதியமைச்சராக இருந்த கக்கன் கொண்டு வந்த வெள்ளை அறிக்கையை ஆதரித்து பேசினார். திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்தபோது எதிராகக் குரல் கொடுத்தவர். பெண்களுக்குப் […]

Read more

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள்

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள்,  மிட்ச் ஆல்பம், தமிழில் : நாகலட்சுமி சண்முகம்,  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 242, விலை  ரூ. 299.  ட்யூஸ்டேஸ் வித் மோரி – என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. தன்னுடைய எழுபதாவது வயதுகளில் “லூகெரிக்’ என்ற இயக்க நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் கல்லூரிப் பேராசிரியர் மோரி. மரணம் நிச்சயம், நேரம் மிகவும் குறைவு என்பதுதான் யதார்த்தம். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, அடிக்கடி சந்திப்பதாகத் தாம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாத […]

Read more

இறையுரையிசை

இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100. ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது. அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான். அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை, மணிமேகலை சிதம்பரம், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது. இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, […]

Read more

லா.ச.ரா.

லா.ச.ரா., லா.ச.ரா. சப்தரிஷி, சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் இலக்கியவுலகில், கதையோ கட்டுரையோ ஒரு வரியைப் படித்தவுடன் “இது இவர் எழுதியதுதானே’ என்று கேட்கும்படியான தனித்துவமிக்க எழுத்து நடை அமையப்பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் லா.ச.ரா. என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறுகதை, புதினம், கட்டுரை என்று தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த எழுத்தாளர் இவராகத்தான் இருப்பார். லா.ச.ரா.வின் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், அவற்றில் காணப்படும் வார்த்தை ஜாலங்கள், தத்துவமொழிகள் […]

Read more

நினைவில் வாழும் குழந்தை கவிஞர்

நினைவில் வாழும் குழந்தை கவிஞர், தேவி.நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம், விலைரூ.180. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்பட்டு உள்ள நுால். கவிஞரின் மகளே தொகுத்து உள்ளார். மறுபதிப்பாக வந்துள்ளது. இந்த தொகுப்பு நுால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து கருத்துரை மற்றும் வாழ்த்துரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அழ.வள்ளியப்பா கலந்து கொண்ட நிகழ்வுகளின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் 81 கட்டுரைகள் இடம் பெற்றுஉள்ளன. அனைத்தும் கவிஞரின் […]

Read more

பெண் வாசனை

பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260. பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால். பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த […]

Read more

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,  பக்.208, விலை ரூ.180. 1953 -1961 வரை அமெரிக்காவின் 34-வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஐஸன் ஹோவரின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ராணுவரீதியாக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பேரில் மூன்றாவதாகப் பிறந்த ஐஸன் ஹோவர் மிகுந்த மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டார். ஆனால் ராணுவக் கல்லூரியில் பயிலும்போது, ஐஸன் ஹோவர் மிகவும் ஒழுங்கீனமாக நடந்தார். ராணுவத்தில் சேர்ந்த […]

Read more

கிருஷ்ண காவியம்

கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலைரூ.250. கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், […]

Read more
1 4 5 6 7 8