நாட்டார் சிந்து கதைப் பாடல்கள்

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் பா. சுபாஷ், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 160ரூ. கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த கொலைகள் பற்றிய, 14 பாடல்களைப் பதிவு செய்து, ஆய்வு நூலாக வழங்கிய நூலாசியர் முயற்சி பாராட்டிற்கு உரியது. கிராமியப் பழங்கலையை மீட்டுருவாக்கம் செய்கிறார் நூலாசிரியர். ஏறக்குறைய முற்றிலும் ஆதரவின்றி அழிந்து வருகிறது. இந்த தெருப்பாடல் கலை கொலைச்சிந்து. அம்மானை, கும்மி, வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு போன்றவை குழுக்களாகப் பாடப்படுபவை. இந்த கொலைச்சிந்து, டேப் அடித்து தனியே நின்று பாடுவது. […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள், டி.எம்.சுந்தரராமன், திருவரசு புத்தக நிலையம், பக். 224, விலை 100ரூ. இந்திய திருநாட்டின் இரு கண்களாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் விளங்குகின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், முத்தான சில பகுதிகளை, இந்த நூல் தருகிறது. பரதனுக்கு ராமன் சொன்ன அறிவுரைகள், இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதும் (பக். 10), நிதிக்குவியல் போன்ற நீதிக் கருத்துகளும் (பக். 13-39), மகாவிஷ்ணுவிற்கே சாபம் கிடைத்ததும் (பக். 64), வால்மீகி ராமாயணத்தில் வரும் பல பழமொழிகளும் (பக். 87 -93), எக்காலத்திற்கும் பொருந்தக் […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

சித்தர்களின் ஜீவ சமாதிகள்

சித்தர்களின் ஜீவ சமாதிகள், து.செல்வகுமார், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழகத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திய 50க்கும் மேற்பட்ட சித்தர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை படிக்கப் படிக்க வியப்பூட்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. யோகி ராம் சுரத்குமார், சேர்மன் சாமிகள், பூண்டி மகான், அரவிந்தர் போன்றவர்கள் செய்த அற்புதங்களுடன், சென்னையில் எந்த எந்த கோவிலில் எந்த சித்தர்களின் சமாதி உள்ளது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ள நல்ல வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. இரா. நல்லகண்ணு விடுதலை போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கில் 8 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்தவர். விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டவர். இப்போதும் பல உயர் பொறுப்பு வகித்து செயல்படுபவர். 90 வயதாகும் இரா. நல்லகண்ணுவைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் பலரும் தெரிவித்த கருத்துக்களை அருமையாக தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ. ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் […]

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

வானம்பாடி

வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு […]

Read more

நதிகள் இணைப்பு சாத்தியமா

நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]

Read more

ஸ்காலர்சிப்

ஸ்காலர்சிப், ந. குமரன், போதி பதிப்பகம், திருப்பூர், பக். 302, விலை 250ரூ. கல்வி கடன் பெறுவது எப்படி? இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நமக்கு வேண்டியதை தேடித் தர கூகுள் இருக்கிறது. அதேபோல, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்விக் கடன்களைப் பற்றிய தகவல்களும், எட்டுத் திக்கும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை தேடிப் பிடித்து தருகிறது இந்த நூல். இதுவரை தமிழில் இப்படி ஒரு விரிவான தொகுப்பு வராதது ஆச்சரியமே. ஒரு பக்கம் […]

Read more
1 37 38 39 40 41 336