நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், பக். 120, விலை 192ரூ. நலம் 360 என்ற தலைப்பில் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்ததோடு, தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் 24 தலைப்புகளில் மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு உபாதை குறித்த விவரங்களும், அவற்றின் தன்மைகளும், தவிர்க்க வேண்டிய வழிமுறைகளும், அவற்றை தீர்ப்பதற்கான உணவு முறைகளுமாக, அனைத்து விவரங்களையும் அலசிச் செல்கிறார். பண்டைய கால உணவு முறைகளில், நலவாழ்வு எப்படி மக்களிடம் நெடுங்காலம் […]

Read more

ஓவியனின் கதை

ஓவியனின் கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், தஞ்சை, விலை 170ரூ. ஓவியக் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற ப. தங்கம், படக்கதைகள் வரைவதில் முத்திரை பதித்தவர். அவர் எழுத்தாளராகவும் இருப்பதால், படக்கதைகளுக்கான கதையை, அவரே சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஓவியங்களையும் வரைந்துவந்தார். எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றில் நவரசங்களும் நிறைந்துள்ளன. சிறந்த நாவலைப் படித்த திருப்தியைத் தருகிறது, இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- நம் நாடு கண்ட நல்லோர் […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. ஒரு நகரத்தையே உருவாக்கிய இலங்கைத் தமிழரின் சாதனை! பிரமிப்பூட்டும் தன்னம்பிக்கை நாயகன், மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு. பசி, பட்டினியுடன் வளரும் இலங்கை அகதி தமிழரான அவரது மனதுக்குள் பெருங்கனவு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெறும் திட்டத்தைக் காட்டி, 3 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒப்பந்தத்துடன் விலை பேசுகிறார். முதலீடு செய்பவர்களை ஈர்த்து, ஆஸ்திரேலியாவுக்கே பெருமை […]

Read more

முதலுதவி

முதலுதவி, வாண்டுமாமா, தனலட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024807.html வெளிநாடுகளில் முதல் உதவி பற்றிய பாடங்களையும் பயிற்சிகளையும் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளனர். ஆனால் இங்கே முதலுதவி குறித்து நாம் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நிகழும் தீக்காயங்கள், விபத்துகள், எலும்பு முறிவுகள், விஷக்கடிகள் போன்றவற்றுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை வாண்டுமாமா அருமையாக விளக்கியுள்ளார். சர்வ சாதாரணமான தலைவலியில் தொடங்கி விஷக்கடி வரையிலான ஆபத்தான முதலுதவி முறைகளை படங்களுடன் நுட்பமாக கூறியுள்ளார். […]

Read more

பெரியார் களஞ்சியம்

பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ. தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், […]

Read more

கவிப்பேரரசு

கவிப்பேரரசு, தொகுப்பாசிரியர் கவிஞர் சி. சித்ரா, காவ்யா, சென்னை, விலை 150ரூ. கவிப் பேரரசு வைரமுத்துவின் மணி விழாவையொட்டி, 60 கவிஞர்கள் தீட்டிய கவிதைகள் கொண்ட நூல். கவிஞர்கள் ஒவ்வொரு கோணத்தில் கவிஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் கவிஞர் சி.சித்ரா, தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கவிதைகள் கவிஞரைப் பாராட்டுவதுடன் மட்டுமல்லாது, தமிழன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் அன்னைக்கு சிறந்த பொன்னாபரணம் இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ், வள்ளுவர் பதிப்பகம், சென்னை, விலை […]

Read more

பஞ்சத்தந்திரக் கதை

பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை  200ரூ. ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ. புவியின் 460கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண்பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையிலும், தேவைப்படும் இடங்கள் எல்லாம், அதற்குரிய படங்களை தந்துள்ளது பாராட்டத்தக்கது. குரங்குகளில் […]

Read more

மேடம் பவாரி

மேடம் பவாரி (பிரெஞ்சு நாவல்), குஸ்தாவ் ப்ளாபர், தமிழில் கோ. பரமேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.114, விலை 90ரூ. பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியத்திற்கு பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில், மேடம் பவாரி இடம்பெறும். கதாநாயகி எம்மா, கள்ளக் காதலிலும், ஆடம்பர வாழ்க்கையிலும் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால், தன் மனைவி நெறி தவறியவள் என்று தெரிந்து கொண்ட பிறகும், எம்மாவின் கணவர், அவளை மனதார நேசிக்கிறார். அவள் இறந்த பிறகும், அவள் […]

Read more
1 59 60 61 62 63 336