தமிழர் வாழ்க்கையில் பூக்கள்

தமிழர் வாழ்க்கையில் பூக்கள், ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 164, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024479.html பத்திரிகைகளில் வெளியான, 15 கட்டுரைகளின் தொகுப்பு. பூவுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்பு, எதற்கெடுத்தாலும் மருந்து சாப்பிடும் மனப்பான்மை, புத்தகங்களின் பயன்பாடு, நூலகம் என, பல தலைப்புளும் சிந்தனையை தூண்டும் செய்திகளை உள்ளடக்கி இருக்கின்றன. கொசுவுக்குப் பயந்து மனிதன் படும் துன்பத்தையும், சிற்றுயிர்களிடம் மனிதன் கொண்டிருந்த இரக்கத்தையும், உயிரியல் பூங்காக்களில் பார்க்க வேண்டியிருக்கும் […]

Read more

வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, இடையன் இடைச்சி நூலகம், கோவை, பக். 96, விலை 100ரூ. கவிதைகளை வெயிலில் நனையவிடலாம், மழையில் காயப் போடலாம், அது இலக்கணப் பிழையோ, சொற்பிழையோ ஆகாது. கவிதையின் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பொருட்பிழை நிகழாது கவிஞன் நிகழ்த்திக் காட்டும் உத்தி அது. கவிஞர் ச. மணி வெயிலில் நனைந்த பிறகும் மழை மழையாகவே இருக்கிறது என்பதை நம்முன் காட்சிப்படுத்துவது அனுபவ வெளிப்பாடு. நூற்றாண்டினாலும் பக்தர்களின் பாதங்களை அலம்பி விடும் தெப்பக்குளத்து மழை கவிஞரின் படிமக் காட்சிக்கு சாட்சி. […]

Read more

வெளிச்சம் விற்க வந்தவன்

வெளிச்சம் விற்க வந்தவன், ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 320, விலை 200ரூ. மழை பொழிய ஆரம்பிக்கும் முன்னே வரும் மண்வாசனை மாதிரியான கதைகள் இவை. கதைக்களம், சித்தரிக்கும் மாந்தர்கள், ஊடாடும் விலங்குகள் எல்லாமே நம்முடன் நெருக்கமாக உறவாடியவையே. அன்றாடம் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்களின் நினைவை மீட்டெடுக்கும் கதைகள் அதிகம். ஒரு கதையைப் படித்ததும் அடுத்த கதையையும் படிக்கலாமே என்று ஏங்க வைக்கும் யதார்த்த உந்துதல். இப்படி ராஜா செல்லமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு பல சிறப்புகள். ஆடுகளை சுமந்து […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, இராம்குமார் சிங்காரம், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html குமுதம் குழுமத்தைச் சேர்ந்த கல்கண்டு இதழில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற தன்னம்பிக்கை ஊட்டிய நூல். ஒரு கருத்தைச் சொல்லவும் கேட்பவர், அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை கதைகள். உலகப் பேச்சாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய கதை சொல்வதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளனர். இதைத்தான் […]

Read more

சங்கரன் கோவில்

சங்கரன் கோவில், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 600ரூ. சங்கரன் கோவில் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர். அந்த ஊரின் திருக்கோவில், அந்த நகரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் அ. பழநிசாமி ஆற்றிய பணிகள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என நகரின் முதல் பட்டதாரிகள், சங்கரன் கோவிலில் பிறந்த தமிழ் அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், இ.மு. சுப்பிரமணியம், முதல் திரையரங்கம், 62 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் பஸ், நெசவுத் தொழில் வளர்ந்த கதை என சங்கரன்கோவிலில் நிகழ்ந்த […]

Read more

திருவாசகம்

திருவாசகம், இந்துமதி பதிப்பகம், சிதம்பரம், விலை 300ரூ. திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் கூற்று. திருவாசகத்திற்கு இதற்கு முன்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்த போதிலும் பேராசிரியர் அ. ஜம்புலிங்கம் சீர்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை எழுதியுள்ளார். மேலும் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத் தனிச் சிறப்பு போன்ற பல பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த உரை நூலில், மாணிக்கவாசகரின் பாடல் நயங்கள், சைவ சித்தாந்தக் கருத்துகள், […]

Read more

விநாடி வினா விடை

விநாடி வினா விடை, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. குழந்தைகள் பயனுள்ள முறையில் பொழுதைப் போக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாண்டு மாமா எழுதியுள்ள நூல். பல்வேறு ஓவியங்கள், அதில் மாறுப்டட ஓவியங்களை குழந்தைகள் அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு வகை. குறிப்பிட்ட இடத்தை அடைய வழிகாட்ட வேண்டும் என்பது இன்னொரு வகை. இப்படிப் பல போட்டிகளை வைத்து அதற்கான விடைகளையும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்ளும் 84 புதிர் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

திருக்குர்ஆனின் பாதையில்

திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ. திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் […]

Read more

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது, பாபநாசம் குறள்பித்தன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. எம்.ஜி.ஆர் பற்றி தாய் வார இதழில் இடம் பெற்ற 21 பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.   —- ஷீரடி பாபா, வி.ஆர்.கே. ரவிராஜ், ஸ்ரீஆனந்த நிலையம், சென்னை, விலை 70ரூ. ஸ்ரீசீரடி மகான் சாயி பாபாவை கடவுளாக பாவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு, மனிதக் கடவுளின் மகத்துவத்தை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு […]

Read more
1 61 62 63 64 65 336